இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க தொழிலதிபரான நீல் மோகன் 10 ஆண்டுகளுக்கு முன்பே ட்விட்டரில் சேர முயற்சித்த போது அவரை ட்விட்டரில் சேராமல் இருக்க கூகுள் அவருக்கு கொடுத்த ரூ.830 கோடி சம்பள விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த தகவல் சமீபத்தில் வெளியான ‘ஜெரோதா’ நிறுவனர் நிகில் காமத் நடத்தும் பாஸ்காஸ்டில், YouTube தலைமை செயல் அதிகாரியான நீல் மோகனை பற்றிய உரையாடலின் போது வெளியானது.
2011ம் ஆண்டில், கூகுளின் விளம்பரத்துறையும் YouTube தயாரிப்பு மாற்றுத் திட்டங்களிலும் முக்கியப் பங்காற்றியவராக இருந்த நீல் மோகன், ட்விட்டரில் சேரக்கூடிய நிலை ஏற்பட்டபோது, கூகுள் அவரை தக்கவைக்கவே இந்த பெரிய தொகையை சலுகையாக வழங்கியது.
பாட்காஸ்டில் நிகில் காமத் கூறியது: “நீங்கள் கூகுளில் இருந்து விலகாமல் இருக்க அவர்கள் $100 மில்லியன் கொடுத்ததாக படித்ததுண்டு. இப்போது இல்லை, ஆனால் 15 ஆண்டுகளுக்கு முன். இது பெரிய தொகைதான்.” என்ற அவர் குறிப்பை நீல் மோகன் மறுக்கவில்லை.
TechCrunch வெளியிட்ட 2011ஆம் ஆண்டு செய்தி ஒருபடி மேலே செல்கிறது: அந்த தொகை “Restricted Stock Units எனும் பங்குகளாக வழங்கப்பட்டது என்று கூறியுள்ளது.
ட்விட்டரில் Chief Product Officer ஆக சேரவேண்டியவராக அவரை கூகுள் மிகப்பெரிய சம்பளத்தை கொடுத்து தக்க வைத்து கொண்டது.
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் இளங்கலைப் பட்டம் பெற்ற நீல் மோகன் ஆரம்பத்தில் Andersen Consulting (தற்போது Accenture) நிறுவனத்தில் பணியாற்றினார், பிறகு NetGravity மற்றும் பின்னர் DoubleClick – இல் Vice President ஆக உயர்ந்தார்,
2007ம் ஆண்டு கூகுள் DoubleClick-ஐ $3.1 பில்லியனுக்கு வாங்கியபோது, கூகுளின் விளம்பரத் துறையில் முக்கியப் பொறுப்பு ஏற்றார். அவருடைய திட்டங்களில் தான் யூடியூப் மிகப்பெரிய பிளாட்பார்மாக வளர்ந்தது.
நீல் மோகன் வரவில்லை என்பதை அறிந்த ட்விட்டர், கூகுளின் Chrome மற்றும் Chrome OS பிரிவை வழிநடத்திக் கொண்டிருந்த சுந்தர் பிச்சையை தங்கள் நிறுவனத்தில் சேர்க்க முயன்றது. ஆனால் கூகுள் அவருக்கும் $50 மில்லியன் மதிப்புள்ள பங்குகளை வழங்கி தக்க வைத்தது.
நீல் மோகன் தற்போது YouTube CEO ஆக உள்ளார். சுந்தர் பிச்சை கூகுளின் CEO ஆகி அதன், பின்னர் 2019இல் Alphabet Inc CEO ஆனார். இன்று இருவருமே ட்விட்டருக்கு செல்லாததால் மிகப்பெரிய உயரத்தில் உள்ளனர்.