சேர்த்து வச்ச மொத்த காசும் போச்சு.. பங்குச்சந்தையில் ரூ.16 லட்சம் நஷ்டம்.. 28 வயது வாலிபர் தற்கொலை..!

  கடந்த 10 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த பணம் முழுவதும் பங்குச்சந்தையில் நஷ்டமாகிவிட்டதை அடுத்து, 28 வயது வாலிபர் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை…

share 1280

 

கடந்த 10 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த பணம் முழுவதும் பங்குச்சந்தையில் நஷ்டமாகிவிட்டதை அடுத்து, 28 வயது வாலிபர் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களில் இந்திய பங்குச்சந்தை மிக மோசமாக சரிந்து வருகிறது. குறிப்பாக நேற்று சென்செக்ஸ் 1400 புள்ளிகளுக்கும் மேலாக சரிந்தது. இதன் காரணமாக முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையிலும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 28 வயது வாலிபர், 18வது வயதில் இருந்து கஷ்டப்பட்டு வேலை செய்து, கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்துள்ளார். வீட்டுக்கு கூட பணம் அனுப்பாமல், தன்னுடைய வருமானத்தின் பெரும்பகுதியை பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளார். ஆனால், சமீப காலமாக பங்குச்சந்தை மிக மோசமாக சரிந்து வந்ததால், அவருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. அவர் சேர்த்து வைத்த ₹16 லட்சம் ரூபாய் முழுவதும் நஷ்டமாகிவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தன்னுடைய வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் சுற்றுப்புறத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதிலிருந்து, சேமித்த அனைத்து பணத்தையும் பங்குச்சந்தையில் முதலீடு செய்யாமல், தங்கம், பிக்சட் டெபாசிட், மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் முதலீடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.