சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஸ்பெஷலாக ஒரு கிரெடிட் கார்டு.. முழு விவரங்கள்..!

  சிஎஸ்கே ரசிகர்களுக்கு பிரத்யேகமாக கிரெடிட் கார்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குனர் விஜய் ஆனந்த் பேட்டி அளித்துள்ளார். சிட்டி யூனியன் வங்கி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன்…

csk cub

 

சிஎஸ்கே ரசிகர்களுக்கு பிரத்யேகமாக கிரெடிட் கார்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குனர் விஜய் ஆனந்த் பேட்டி அளித்துள்ளார்.

சிட்டி யூனியன் வங்கி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து, புதிய கிரெடிட் கார்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், சிஎஸ்கே ரசிகர்கள் பல்வேறு சலுகைகளுடன் கூடிய கிரெடிட் கார்டு பெறலாம் என்று அவர் கூறினார்.

இந்த கிரெடிட் கார்டு, விசா மற்றும் மாஸ்டர் கார்டு ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கும். இது ஐபிஎல் நடக்கும் இரண்டு மாதங்களுக்கு மட்டும் செயல்படும் என நினைக்க வேண்டாம்; வருடம் முழுவதும் இந்த கார்டை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், இதில் பல்வேறு ரிவார்டு சலுகைகளும் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமின்றி, யார் வேண்டுமானாலும் இந்த கிரெடிட் கார்டை பெற்றுக்கொள்ளலாம். பல்வேறு அம்சங்களுடன் கூடிய இந்த கார்டு இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார்டை பெறும் போதே ரிவார்டு புள்ளிகள் கிடைக்கும், மேலும் பல்வேறு சலுகைகளும் வழங்கப்படும்.

இந்த கார்டை பெறுபவர்களுக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது; இதுவரை இல்லாத அளவில் ரிவார்டு புள்ளிகள் கிடைக்கும். ஐபிஎல் டிக்கெட் வாங்கும் போது இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். ஐபிஎல் டிக்கெட் மட்டுமின்றி வேறு எந்த ஒரு வர்த்தகத்திற்கும் பயன்படுத்தினால் கூடுதல் ரிவார்டு பாயிண்ட்கள் கிடைக்கும் என்று அவர் கூறினார்.

“சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து கிரெடிட் கார்டை அறிமுகம் செய்வதில் நாங்கள் பெருமை அடைகிறோம். இது எங்கள் வங்கிக்கும் மிகப்பெரிய பெருமை,” என்று விஜய் ஆனந்த் தெரிவித்தார்.