சாம்சங் நிறுவனத்தின் அட்டகாசமான டேப்லெட்.. என்னென்ன சிறப்பம்சங்கள்?

Published:

மொபைல் போன் தயாரிப்பில் நம்பர் ஒன் நிறுவனமாக இருந்து வரும் சாம்சங் நிறுவனம் அவ்வப்போது டேப்லெட் மாடல்களை வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சாம்சங் நிறுவனத்தின் Samsung Galaxy Tab A8 என்ற டாப் கடந்த ஆண்டு வெளியான போதிலும் இன்னும் இந்த டேப் நல்ல விற்பனை ஆகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. மூன்று வித மாடல்களில் வெளியாகியிருக்கும் இந்த டாப் குறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம்

Samsung Galaxy Tab A8 டேப் மூன்று வெவ்வேறு வகைகளில் கிடைக்கிறது: அவை பின்வருவன

ரூ.8499 விலையில் ஒரு சூப்பரான ரெட்மி ஸ்மார்ட்போன்.. தவற விடாதீர்கள்..!

* 3ஜிபி ரேம் + 32ஜிபி சேமிப்பு: ரூ.16,999
* 4ஜிபி ரேம் + 64ஜிபி சேமிப்பு: ரூ.18,999
* 4ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு: ரூ.21,999

இந்த டேப்லெட்டில் 10.5 இன்ச் 1920×1200 டிஸ்ப்ளே, ஆக்டா கோர் யூனிசாக் டி618 பிராசசர் மற்றும் 7040எம்ஏஎச் பேட்டரி உள்ளது. ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் கொண்ட இந்த டேப்லெட்டில் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் பின்புற கேமரா உள்ளது.

Samsung Galaxy Tab A8 டேப்லெட்டின் சில முக்கிய விவரக்குறிப்புகள் இதோ:

ரூ.2000க்குள் நோக்கியாவின் சூப்பர் மொபைல்.. 2 நாள் சார்ஜ் நிற்கும்..!

* 10.5-இன்ச் 1920×1200 TFT LCD டிஸ்ப்ளே
* யுனிசாக் டி618 ஆக்டா கோர் பிராசசர்
* 3 ஜிபி, 4 ஜிபி ரேம்
* 32 ஜிபி, 64 ஜிபி, 128 ஜிபி ஸ்டோரேஜ்
* 7040mAh பேட்டரி
* ஆண்ட்ராய்டு 11 ஆப்பரேட்டிங் சிஸ்டம்
* 5MP செல்பி கேமரா 8MP பின்புறம் கேமரா
* Wi-Fi, Bluetooth, LTE வசதிகள்

Samsung Galaxy Tab A8 ஒரு நல்ல பட்ஜெட் டேப்லெட்டாகும், இதன் செயல்திறன், அம்சங்கள் மாணவர்கள், தொழிலதிபர்களுக்கு ஏற்றவையாக உள்ளது.

ரூ.6000, ரூ.8000ல் சூப்பர் ஸ்மார்ட்போன்கள்.. Itel அறிமுகம் செய்திருக்கும் இரு மாடல்..!

மேலும் இந்த டேப் வாங்க சில சலுகைகளும் உண்டு. HDFC வங்கி கிரெடிட் கார்டில் ரூ.2000 உடனடி தள்ளுபடி & 6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் EMI அம்சத்துடன் கிடைக்கும்.

மேலும் உங்களுக்காக...