ரூ.8499 விலையில் ஒரு சூப்பரான ரெட்மி ஸ்மார்ட்போன்.. தவறவிடாதீர்கள்..!

மிக குறைந்த விலையில் அதிக வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வரும் நிறுவனம் ரெட்மி என்பதும் இந்நிறுவனத்தின் அனைத்து மாடல்களும் வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமான ரெட்மி ஸ்மார்ட்போன் மாடல் இன்னும் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த போன் குறித்து தற்போது பார்ப்போம்.

இந்தியாவில் ரெட்மி 12C வெளியாகி ஆறு மாதங்கள் ஆகியுள்ள நிலையில் இன்னும் அதிகமாக விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இதோ:

6.71 இன்ச் HD+ LCD டிஸ்ப்ளே

MediaTek Helio G85 பிராஸசர்

4 ஜிபி அல்லது 6 ஜிபி ரேம்

64 ஜிபி அல்லது 128 ஜிபி ஸ்டோரேஜ்

50MP பிரதான கேமரா + 2MP ஆழம் சென்சார் கேமிரா

5 எம்.பி செல்பி கேமிரா

5000mAh பேட்டரி

ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான MIUI 13

ரெட்மி 12C ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் என்றாலும் பணத்திற்கு நல்ல மதிப்பை வழங்குகிறது. பெரிய டிஸ்ப்ளே, சக்திவாய்ந்த பிராஸசர் மற்றும் நீண்ட கால பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ள இந்த போனின் கேமராவும் விலைக்கு ஏற்றது.

ரெட்மி 12C ஸ்மார்ட்போன் மேட் பிளாக், புதினா பச்சை, ராயல் ப்ளூ மற்றும் லாவெண்டர் பர்பில் என நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது: இது Flipkart, Amazon, Mi.com, Mi Home மற்றும் பிற சில்லறை விற்பனை நிலையங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கு,

விலையை பொருத்தவரை ரெட்மி 12C 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல் ரூ.8,499 என்றும், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடல் ரூ.10,499
என்றும் விற்பனையாகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews