ரூ.6000, ரூ.8000ல் சூப்பர் ஸ்மார்ட்போன்கள்.. Itel அறிமுகம் செய்திருக்கும் இரு மாடல்..!

Itel நிறுவனம் ஏற்கனவே பட்ஜெட் ஸ்மார்ட் ஃபோன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது ரூபாய் 6000 மற்றும் ரூபாய் 8000 என்ற விலையில் இரண்டு புது வித மாடல் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ள நிலையில் இந்த மாடல்களும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Itel நிறுவனம் வெளியிட்டுள்ள இரண்டு மாடல்கள் குறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம்.

Itel இந்தியாவில் P40+ மற்றும் A60s ஆகிய இரண்டு புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை இரண்டும் 10,000 ரூபாய்க்கு கீழ் உள்ளன.

itel P40+ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:

விலை: ரூ 8,099
6.82-இன்ச் HD+ (720 x 1,640 பிக்சல்கள்) IPS டிஸ்ப்ளே
Unisoc T606 SoC பிராஸசர்
4 ஜிபி ரேம்
128 ஜிபி ஸ்டோரேஜ்
3MP பின்புற கேமரா, 2MP செல்பி கேமரா
7000mAh பேட்டரி
ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்

itel A60s ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:

விலை: ரூ 6,299 (4 ஜிபி + 64 ஜிபி)
விலை: ரூ 6,999 (4 ஜிபி + 128 ஜிபி)
6.6-இன்ச் HD+ (720 x 1,600 பிக்சல்கள்) IPS டிஸ்ப்ளே
Unisoc SC9863A1 SoCபிராஸசர்
4 ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ்
64ஜிபி ரேம் /128ஜிபி ஸ்டோரேஜ்
8MP பின்புற கேமரா, 5MP செல்பிகேமரா
5000mAh பேட்டரி
ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ்

இரண்டு ஃபோன்களும் ஜூலை 11 முதல் இந்தியாவில் கிடைக்கும் என்றும், itel P40+ Amazon தளத்தில் பிரத்தியேகமாக சலுகை விலையில் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் itel A60s அமேசான் மற்றும் பிற சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது..

பெரிய டிஸ்ப்ளே, வேகமான பிராஸசர் மற்றும் பெரிய பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளதால்நீங்கள் பட்ஜெட் போன் வாங்க விருப்பம் என்றால் இந்த போனை தாராளமாக வாங்கலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews