சிங்காரம், நீ என்னை தொட்டிருக்க கூடாது.. ரஷ்யாவில் இருந்து பறந்த 400 ட்ரோன்கள் 40 ஏவுகணைகள்.. உக்ரைன் அதிர்ச்சி..!

  கடந்த ஞாயிற்றுக்கிழமை, “ஆபரேஷன் ஸ்பைடர் வெப் என்னும் பெயரில் உக்ரைன் ரஷ்யா மீது ஒரு மிகப்பெரிய தாக்குதல் நடத்தியது என்பதும், 117 ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ரஷ்யாவின் விமானத் தளங்கள்…

ukrain

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை, “ஆபரேஷன் ஸ்பைடர் வெப் என்னும் பெயரில் உக்ரைன் ரஷ்யா மீது ஒரு மிகப்பெரிய தாக்குதல் நடத்தியது என்பதும், 117 ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ரஷ்யாவின் விமானத் தளங்கள் அழிக்கப்பட்டதாகவும், இதனால் ரஷ்யாவுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்த ரஷ்யா, தற்போது ஒரு மிகப்பெரிய தாக்குதலை உக்ரைன் மீது நடத்தி இருப்பதாகவும், இந்த தாக்குதலால் உக்ரைன் நிலைகுலைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் 400க்கும் அதிகமான ட்ரோன்கள் உக்ரைன் மீது ஏவப்பட்டதாகவும், 40க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் ரஷ்ய இராணுவத்தால் ஏவப்பட்டதாகவும் உக்ரைன் அதிபர் கூறியுள்ளார்.

இதனால், உக்ரைன் நாட்டில் தற்போது போர் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்து வருவதாகவும், வடமேற்கு பகுதியில் மட்டும் 115 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டதில் பலர் காயமடைந்ததாகவும், சிலர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், உக்ரைன் அதிபர் உலக நாடுகளிடம் உதவி கேட்டுவருவதாக தெரிகிறது.

ரஷ்யாவின் இந்த தாக்குதலை கணக்கில் கொண்டு, உலக நாடுகள் உடனடியாக இந்த போரை நிறுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அனைத்து நாடுகளும் ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய நேரம் இது என்றும் தெரிவித்தார்.

ஆனால் ஏற்கனவே, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்யா – உக்ரைன் போர் இப்போதைக்கு முடியாது போல் தெரிகிறது என்று கூறியுள்ளார். ஏனெனில், உக்ரைன் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க புதின் தயாராகி வருகிறார் என்றும் தெரிவித்தார்.

அந்த தாக்குதல் தான் இப்போது நடந்திருப்பதாகவும், உக்ரைனை முழுமையாக அழிக்கும் வரை ரஷ்யா ஓயாது என்றும் கூறப்படுவதால், பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் குறித்து பேட்ட படத்தின் ரஜினியின் வசனமான ’சிங்காரம் நீ என்னை தொட்டு இருக்க கூடாது’ என்று ரஷ்யா உக்ரைனை பார்த்து சொல்வது போல் மீம்ஸ்கள் பதிவாகி வருகின்றன