செயற்கைக்கோள் அடிப்படையிலான பிராட்பேண்ட் சேவைகள்: ரிலையன்ஸ் மாஸ் திட்டம்..!

Published:

இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் அவ்வப்போது தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஆச்சரியத்தக்க வகையில் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இந்நிறுவனம் தற்போது சேட்டிலைட் மூலம் பிராட்பேண்ட் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு தர திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் இன்டர்நெட் கிடைக்காத பல கிராமங்களுக்கும் இன்டர்நெட் வசதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ தொலைதூரப் பகுதிகளில் அதிவேக இணைய இணைப்பை நீட்டிக்க செயற்கைக்கோள் அடிப்படையிலான பிராட்பேண்ட் சேவைகளை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் டிஜிட்டல் பிரிவான ஜியோ, இந்தியாவில் செயற்கைக்கோள் அடிப்படையிலான பிராட்பேண்ட் சேவைகளை வழங்க செயற்கைக்கோள் ஆபரேட்டர் SES உடன் ஒரு கூட்டு முயற்சியை கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்தது. ஜியோ ஸ்பேஸ் டெக்னாலஜி என்று அழைக்கப்படும் இந்த கூட்டு முயற்சியானது, இந்தியாவின் தொலைதூரப் பகுதிகளுக்கு அதிவேக இணைய இணைப்பை வழங்க சாத்தியம் உள்ளதாக கருதப்படுகிறது.

செயற்கைக்கோள் அடிப்படையிலான பிராட்பேண்ட் சேவைகள் கிராமப்புற இந்தியாவிற்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும். இந்தியாவில் இன்னும் பல கிராமங்களில் இண்டர்நெட் வசதி இல்லாத நிலையில் ஜியோவின் இந்த பிராண்ட்பேண்ட் சேவைகள் பயனுள்ளதாக இருக்கும்.

ஜியோ ஸ்பேஸ் டெக்னாலஜி தனது சேவைகளை 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த திட்டத்தில் $100 மில்லியன் முதலீடு செய்யப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஜியோவின் செயற்கைக்கோள் அடிப்படையிலான பிராட்பேண்ட் சேவைகள் இந்திய பிராட்பேண்ட் சந்தையில் போட்டியை தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் டாடா கம்யூனிகேஷன்ஸ் ஆகியவை மாற்று வழியை யோசிக்கும் நிலைக்கு தள்ளப்படும்.

செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ நுழைவது இந்திய பொருளாதாரத்திற்கு சாதகமான வளர்ச்சியாகும். இந்தியாவில் டிஜிட்டல் பற்றாக்குறையை குறைக்கவும், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும் இந்த சேவைகள் உதவும்.

மேலும் உங்களுக்காக...