ரூ. 69,900க்கு விற்கப்படும் ஐபோன் 13, பிளிப்கார்ட்டில் ரூ.58,749 மட்டுமே.. பெரும் சலுகை..!

Published:

ஆப்பிள் ஸ்டோரில் 69,900க்கு விற்கப்படும் ஐபோன் 13 தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.58,749 மட்டுமே விற்பனை ஆகிறது என்பதும் அது மட்டும் இன்றி எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் பயன்படுத்தும் நபர்கள் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது ஐபோன் 13 பிளிப்கார்ட்டில் சலுகை விலையில் கிடைக்கிறது. 5ஜி அம்சம் கொண்ட ஐபோன் 13 தற்போது ரூ.58,749 என்ற விலைக்கு விற்பனை ஆகி வருகிறது என்றும் அது மட்டுமின்றி எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் அல்லது ஆப்பிள் ஸ்டோரில் நேரடியாக இந்த போனை வாங்கினால் 69,900 வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பிளிப்கார்ட் வழியாக தற்போது வாங்கினால் ரூபாய் 11,151 மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு உள்ளவர்கள் இந்த ஐபோனை ரூ.57,999க்கு வாங்க முடியும், ஏனெனில் இந்த கார்டுக்கு ஃப்ளிப்கார்ட் 10 சதவீதம் வரை தள்ளுபடி அதாவது ரூ.750 தள்ளுபடி வழங்குகிறது. 30,000 வரை கூடுதல் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் உள்ளது, இது ஐபோன் 13 ஐ இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம். உங்கள் தற்போதைய தொலைபேசியின் தரம் அடிப்படையில் பரிமாற்றத் தொகை கணக்கிடப்படுகிறது.

ஐபோன் 13 என்பது சமீபத்திய ஐபோன் 14 ஸ்மார்ட்போனைப் போலவே உள்ளது என்ற விமர்சனம் உள்ளது. ஐபோன் 14 இந்தியாவில் ரூ.65,000க்கு அதிகமாக விற்பனை செய்யப்படும் நிலையில் கிட்டத்தட்ட அதே கேமரா, டிஸ்ப்ளே, பேட்டரி மற்றும் சிப்செட் ஆகியவற்றை கொண்ட ஐபோன் 13ஐ சலுகை விலையில் பெற்று கொள்ளலாம்.

மேலும் உங்களுக்காக...