ஜியோவின் இந்த பிளான்களின் ரீசார்ஜ் செய்தால் JioSaavn இலவசம்: முழு விபரங்கள்..!

Published:

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பெரும் சலுகைகளை வாரி வழங்கி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இசை ஆர்வலர்களுக்கு JioSaavn இலவசமாக வழங்கும் சில பிளான்களை அறிவித்துள்ளது. சிறந்த இசை ஆர்வலர்களுக்கு இசை அனுபவம் பெற, பாடல்களை டவுன்லோட் செய்ய, ஆஃப்லைனில் இசை கேட்க கீழ்கண்ட இந்த பிளான்களில் ரீசார்ஜ் செய்தால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

JioSaavn இலவச சந்தா பெற கீழ்க்கண்ட ஐந்து ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்தால் போதும்.ரூ.269 என்ற குறைந்த பிளானில் இருந்து ரூ.789 என்ற அதிக பிளான் திட்டங்கள் வரை JioSaavn Pro சந்தாவை பெறலாம். JioSaavn Proவை தனியாக வாங்க வேண்டும் என்றால் மாதத்திற்கு ரூ.99 செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமும் 1.5 ஜிபி டேட்டாவின் ரூ. 269 திட்டம், 56 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரூ. 529 திட்டம், 84 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.739 திட்டங்களில் ரீசார்ஜ் செய்தால், விளம்பரமில்லா JioSaavn Pro சந்தாவை பெறலாம். அதேபொல் ரூ.589 விலையுள்ள 2ஜிபி மற்றும் 56 நாட்கள் வேலிடிட் திட்டம், 84 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.789 திட்டங்களிலும் JioSaavn Pro சந்தாவை பெறலாம்.

தங்கள் ஜியோ மொபைல் எண்களைப் பயன்படுத்தி JioSaavn செயலியில் உள்நுழைவதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த ட்யூன்களை பதினைந்து வெவ்வேறு மொழிகளில் கேட்கலாம். JioSaavn Pro சந்தா, விளம்பரங்கள் இல்லாத தடையில்லா இசையை இயக்குதல், வரம்பற்ற பதிவிறக்கங்கள், JioTunes இன் விரிவான தொகுப்புக்கான அணுகல் மற்றும் உயர்தர ஆஃப்லைன் இசையை அனுபவிக்கும் பாக்கியம் உள்ளிட்ட பல நன்மைகளைத் திறக்கிறது.

மேலும் உங்களுக்காக...