ராமாயணத்தில் உள்ள கதாபாத்திரங்களுக்கு பொருத்தமானவர்கள் யார் யார்? AI டெக்னாலஜியின் தேர்வு..!

Published:

AI டெக்னாலஜி என்பது மனிதனின் பகுத்தறிவை நெருங்கி விட்டது என்றும் அது தரும் ரிசல்ட்டுகள் மிகவும் துல்லியமாகவும் மனிதனே கொடுத்தால் கூட இந்த அளவுக்கு துல்லியமாக கொடுக்க முடியுமா என்ற அளவுக்கு இருக்கிறது என்றும் கூறப்பட்டு வருகிறது. எனவே மனிதனுக்கு மாற்றாக AI டெக்னாலஜியை அனைவரும் பயன்படுத்த தொடங்கி விட்டதால் ஏராளமானவர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் AI டெக்னாலஜி பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் ராமாயணத்தில் உள்ள ராமர், சீதை உள்பட அனைத்து கேரக்டர்களுக்கும் பாலிவுட்டில் உள்ள எந்த நடிகர்கள் பொருத்தமாக இருப்பார்கள் என்பதை கணித்துக் கூறியுள்ளது.

விரைவில் வெளியாகவிருக்கும் ’ஆதிபுருஷ்’ திரைப்படத்தில் ராமர் கேரக்டரில் பிரபாஸ் நடித்தது குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்திருக்கும் நிலையில் AI குறிப்பிட்டு இருக்கும் இந்த கதாபாத்திரங்கள் சரியாக இருக்குமா என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

ராமாயணத்தில் உள்ள கேரக்டர்களுக்கு சிறந்த பாலிவுட் நட்சத்திர நடிகர்கள் என்னவாக இருக்க முடியும்? என்று AIயிடம் கேட்டதற்கு ChatGPT, Google Bard மற்றும் BING ஆகியவை தந்த ரிசல்ட்டுக்கள் இதோ:

ராமர் கேரக்டர்

கூகுள் பார்ட்: ஹிருத்திக் ரோஷன்
பிங்: ஹிருத்திக் ரோஷன்

கௌசல்யா கேரக்டர்

ChatGPT: டிம்பிள் கபாடியா
கூகுள் பார்ட்: நீனா குப்தா
பிங்: ஷபானா ஆஸ்மி

சீதை கேரக்டர்

கூகிள் பார்ட்: தீபிகா படுகோன்
பிங்: தீபிகா படுகோனே

ஜனகராஜா

ChatGPT: அமிதாப் பச்சன் அல்லது நசிருதீன் ஷா
கூகுள் பார்ட்: அமிதாப் பச்சன்
பிங்: நசிருதீன் ஷா

லட்சுமணன் கேரக்டர்

ChatGPT: விக்கி கௌஷல் அல்லது கார்த்திக் ஆரியன்
கூகுள் பார்ட்: ரன்வீர் சிங்
பிங்: ரன்வீர் சிங்

பரதன் கேரக்டர்

ChatGPT: ஆயுஷ்மான் குர்ரானா
கூகிள் பார்ட்: ஷாஹித் கபூர்
பிங்: ராஜ்குமார் ராவ்

அனுமன் கேரக்டர்

ChatGPT: அஜய் தேவ்கன்
கூகுள் பார்ட்: டைகர் ஷ்ராஃப்
பிங்: வித்யுத் ஜம்வால்

இராவணன் கேரக்டர்

ChatGPT: நவாசுதீன் சித்திக்
கூகுள் பார்ட்: ரன்பீர் கபூர்
பிங்: நவாசுதீன் சித்திக்

தசரத மன்னன்

ChatGPT: அனுபம் கெர்
கூகுள் பார்ட்: அனில் கபூர்
பிங்: அமிதாப் பச்சன்

கைகேயி கேரக்டர்

ChatGPT: தபு
கூகுள் பார்ட்: ரேகா
பிங்: தபு

AI கொடுத்த ராமாயண கேரக்டர்களுக்காக நட்சத்திரங்கள் சரியான தேர்வா? என்பதை கமெண்ட்டில் உஙக்ள் கருத்தை தெரிவியுங்கள்..!

மேலும் உங்களுக்காக...