Realme 11 Pro+ 5G ஸ்மார்ட்போன்.. முதல் நாளில் மட்டும் 60,000 யூனிட் விற்பனை.. மிகப்பெரிய சாதனை..!

By Bala Siva

Published:

இந்தியாவில் Realme 11 Pro+ 5G ஸ்மார்ட் போன் நேற்று அறிமுகம் நிலையில் நேற்று ஒரே நாளில் 60,000 யூனிட் நாடு முழுவதும் விற்பனை ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. ரூ.25,000ம் விலைக்கு மேல் உள்ள ஒரு ஸ்மார்ட் போன் மாடல் ஒரே நாளில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் விற்பனையாவது இதுவே முதல் முறை என்றும் இந்த போன் விற்பனையில் ஒரு மிகப்பெரிய சாதனையை செய்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

Realme 11 Pro+ 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் என்னவெனில் 200MP முதன்மை கேமரா, 120Hz AMOLED டிஸ்ப்ளே மற்றும் MediaTek Dimensity 7050 சிப்செட் ஆகியவற்றைக் கொண்டது. இந்தியாவில் இதன் விலை ரூ.27,999.

Realme 11 Pro+ 5G இந்தியாவில் முதல் நாளே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதால் இந்த பிரிவில் உள்ள மற்ற பிராண்டுகளுடன் இந்நிறுவனம் போட்டியிட முடியும் என்பதை இது காட்டுகிறது.

Realme 11 Pro+ 5G விற்பனையின் முதல் நாளே இவ்வளவு பெரிய சாதனை செய்ய முக்கிய காரணங்கள் இதுதான்:

* ஸ்மார்ட்போனில் சக்திவாய்ந்த பிராஸசர் மற்றும் பேட்டரி உள்ளது

* சந்தையில் உள்ள மற்ற ஸ்மார்ட்போன்களைவிட தனித்துவம் கொண்டது

* இதே அம்சங்களை கொண்ட மற்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை விட விலை மிகவும் குறைவு.

* வலுவான மார்க்கெட்டிங்

மேலும் உங்களுக்காக...