காடு போல அடர்த்தியான, கருமையான முடி வேண்டுமா… அப்போ நெல்லிக்காய் ஹேர் ஆயில் பயன்படுத்துங்க…

By Velmurugan

Published:

நெல்லிக்காயில் பல விதமான நன்மைகள் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.. அதே போல் நெல்லிக்காயில் இருக்கக்கூடிய ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட் உடலின் ரத்த சுத்திகரிப்பானதாக செயல்படுகிறது. இது முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. மேலும் உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.

நெல்லிக்காயில் இருக்கக்கூடிய விட்டமின் சி கொலாஜின் உற்பத்தி செய்ய உதவுகிறது. இது முடி வளர்ச்சியை தூண்டுகிறது. டெத் செல்ஸ் அதவாது இறந்த செல்களை அகற்றுகிறது, அதனால் புதிய முடியின் செல்கள் உருவாக ஊக்குவிப்பதாக சொல்லப்படுகிறது.

இதற்கு நெல்லிக்காய் எடுத்து பேஸ்ட் அரைத்து சாறு எடுத்து கொண்டு அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து நேரடியாக உச்சந்தலையில் நல்ல மசாஜ் செய்து அரைமணி நேரம் அப்படியே விட்டுட்டு லேசான ஷாம்பூ அல்லது நல்ல கண்டிஷனர் பயன்படுத்தி கழுவ வேண்டும் . இப்படி செய்தால் நமது முடி பளபளபளவேன இருக்கும்.

அடிவயிறு தொப்பை பிரச்சனையா…. கரைக்க எளிதான வழிமுறைகள் இதோ!

நெல்லிக்காய் எண்ணெய் அதோடு தேங்காய் எண்ணெயும் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். ஒரு சுத்தமான பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய்யை சூடாக்கி அதோடு சில நெல்லிக்காய் துண்டுகளை சேர்த்து, எண்ணெய் நிறம் மாறும் வரை காத்திருந்து அதன் பின் அந்த எண்ணெயுடன் பாதாம் எண்ணெய் கலந்து தேய்த்து வரவேண்டும். இதுவும் முடி வளர்ச்சிக்கு ஒரு சிறந்த டானிக் என்று சொல்லப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...