தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி தந்த வானிலை ஆய்வு மையம்!

Published:

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நாளை குறிப்பாக 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், 18, 19 ஆகிய இரண்டு தினங்களுக்கு தமிழகத்தில் பல மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.

அதிகபட்ச வெப்பநிலை என பார்க்கும் பொழுது தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையாக 38லிருந்து 40 டிகிரி செல்சியஸ் இருக்க கூடும்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியிகளில் வானிலை முன்னறிவிப்பு என்று பார்க்கும் பொழுது அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலையாக 38 டிகிரி செல்சியிலிருந்து 39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 28 இலிருந்து 29 டிகிரி செல்சியஸ் ஆகிய இருக்கக்கூடும். இந்த இரண்டு டிகிரி செல்சியஸ் நேற்றிலிருந்து இன்று குறைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடிவயிறு தொப்பை பிரச்சனையா…. கரைக்க எளிதான வழிமுறைகள் இதோ!

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மீனவர்களுக்கான எச்சரிக்கை என்று பார்க்கும்போது தென் கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னர் வளைகுடா பகுதி மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 45லிருந்து 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படும். இதனால் இந்த பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் உங்களுக்காக...