5 கப் வாங்கிய சிஎஸ்கே, மும்பை அமைதியா இருக்குது.. ஒரே ஒரு கப்பை வாங்கிட்டு இம்புட்டு ஆட்டமா? பரிதாபமாக போன 11 உயிர்கள்..

  ஐபிஎல் தொடரில் 18 ஆண்டுகள் காத்திருந்து ஒரு கோப்பையை கைப்பற்றிய பெங்களூரு அணி, வெற்றி விழாவை கொண்டாடிய நிலையில், அதில் ஏற்பட்ட நெரிசலால் 11 அப்பாவி உயிர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

rcb dead

 

ஐபிஎல் தொடரில் 18 ஆண்டுகள் காத்திருந்து ஒரு கோப்பையை கைப்பற்றிய பெங்களூரு அணி, வெற்றி விழாவை கொண்டாடிய நிலையில், அதில் ஏற்பட்ட நெரிசலால் 11 அப்பாவி உயிர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர் அணி ஐபிஎல் சாம்பியன் பட்டம் பெற்றதை அடுத்து வெற்றியை கொண்டாட, பெங்களூரில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், ஏராளமான பெங்களூர் சின்னச்சாமி மைதானத்திற்கு ரசிகர்கள் வருகை தந்தனர். டிக்கெட் மற்றும் பாஸ் வசதிகள் இருந்ததாலும், பார்க்கிங் வசதி இல்லாமை காரணமாக பொதுமக்கள் பெரும் அவதியடைந்தனர்.

இந்த நிகழ்ச்சி உள்ளே சந்தோஷமாக நடைபெற்று கொண்டிருந்த போதும், வெளியே கூட்டம் கட்டுக்கடங்காமல் போனது. கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இதில் ஆறு பேர் ஆண்கள், நான்கு பேர் பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் என்பதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிக கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்ததாகவும், அப்போதுதான் நெரிசல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் பலர் மயங்கி விழுந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடக துணை முதல்வர் டி. கே. சிவகுமார், “இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கூறுகிறேன்” என்று தெரிவித்திருந்தாலும், பலியான 11 உயிர்கள் திரும்ப வரப்போவதில்லை என்பதும், இதற்கு முழுமையாக கர்நாடக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

வெற்றி ஊர்வலத்தை தடுக்க அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்றும், மிகவும் எளிமையாக நெரிசலே இல்லாத இடத்தில் இந்த வெற்றியை கொண்டாடியிருக்கலாம் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஐபிஎல் தொடரில் மும்பையும் சென்னையும் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை பெற்று, அமைதியாக வெற்றியை கொண்டாடின. ஆனால், ஒரே ஒரு கோப்பையை வென்ற பெங்களூரின் ஆட்டம் அதிகமாய் இருந்ததால் தான் இந்த விபரீதம் நிகழ்ந்ததாக நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.