ஐபிஎல் தொடரில் யார் யாருக்கு என்னென்ன பரிசுகள்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு டாடா கர்வ் கார் மற்றும் ரூ.10 லட்சம் ஏன்?

  ஒருவழியாக ஐபிஎல் தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்த நிலையில் பெங்களூர் அணி கோப்பையை கைப்பற்றிய நிலையில் அந்த அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது என்பது அனைவருக்கும் அறிந்ததே. அதேபோல் இரண்டாம்…

ipl money

 

ஒருவழியாக ஐபிஎல் தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்த நிலையில் பெங்களூர் அணி கோப்பையை கைப்பற்றிய நிலையில் அந்த அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது என்பது அனைவருக்கும் அறிந்ததே. அதேபோல் இரண்டாம் இடம் பெற்ற பஞ்சாப் அணிக்கு 12.5 கோடி ரூபாய் பரிசு கிடைத்தது.

இந்த நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் யார் யாருக்கு என்ன பரிசுகள் வழங்கப்பட்டது என்பதையும் குறிப்பாக ராஜஸ்தான் அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக களம் இறங்கிய 14 வயது வைபவ் சூர்யவன்ஷிக்கு டாடா கர்வ் கார் மற்றும் 10 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது ஏன் என்பது குறித்தும் தற்போது பார்ப்போம்.

இந்த ஆண்டுக்கான பரிசு பட்டியலில் முழு விவரம் இதோ:

வகை / விருது வெற்றியாளர் பரிசு தொகை
சாம்பியன் (Winners) RCB ₹20 கோடி
இரண்டாம் இடம் (Runners-up) பஞ்சாப் கிங்ஸ் (PBKS) ₹12.5 கோடி
மூன்றாம் இடம் (3rd place) மும்பை இந்தியன்ஸ் ₹7 கோடி
நான்காம் இடம் (4th place) குஜராத் டைட்டன்ஸ் ₹6.5 கோடி
ஆரஞ்சு கேப் சாய் சுதர்சன் ₹10 லட்சம்
பர்ப்பிள் கேப் பிரசித் கிருஷ்ணா ₹10 லட்சம்
உதயமான வீரர் (Emerging Player) சாய் சுதர்சன் ₹10 லட்சம்
மிகவும் மதிப்புமிக்க வீரர்  சூர்யகுமார் யாதவ் ₹15 லட்சம்
சூப்பர் ஸ்ட்ரைக்கர் ஆஃப் த சீசன் வைபவ் சூரியவம்‌ஷி ₹10 லட்சம் & டாடா கர்வ் கார்
ஃபேண்டஸி கிங் ஆஃப் த சீசன் சாய் சுதர்சன் ₹10 லட்சம்
சிறந்த கேட்ச் கமிந்து மெண்டிஸ் ₹10 லட்சம்
அதிக டாட் பந்துகள் வீசியவர் மொஹம்மது சிராஜ் ₹10 லட்சம்
சீசனில் அதிக சிக்ஸர்கள் நிக்கோலஸ் பூரன் ₹10 லட்சம்
சீசனில் அதிக பவுண்டரிகள் சாய் சுதர்சன் ₹10 லட்சம்
ஃபேர் பிளே விருது சென்னை சூப்பர் கிங்ஸ் ₹10 லட்சம்
சிறந்த பிச்  விருது டெல்லி கேப்பிடல்ஸ் , நியூ டெல்லி ₹50 லட்சம்