ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்.. பத்மஸ்ரீ விருது பெற்ற சாமியார் மீது பாலியல் புகார்.. என்னை பலமுறை கற்பழித்தார், கருக்கலைப்பு செய்தார்.. இளம்பெண் புகார்.

  மேற்கு வங்க மாநிலத்தில், பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல துறவியான சுவாமி பிரதீப்தானந்தா, கார்த்திக் மகராஜ் என்று அறியப்படுபவர் மீது ஒரு பெண் பாலியல் பலாத்காரப் புகார் அளித்துள்ளார். 2013 ஆம் ஆண்டு…

monk

 

மேற்கு வங்க மாநிலத்தில், பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல துறவியான சுவாமி பிரதீப்தானந்தா, கார்த்திக் மகராஜ் என்று அறியப்படுபவர் மீது ஒரு பெண் பாலியல் பலாத்காரப் புகார் அளித்துள்ளார். 2013 ஆம் ஆண்டு முதல், பள்ளி வேலை வாங்கி தருவதாக கூறி பலமுறை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்பெண் தனது புகாரில் குறிப்பிட்டிருக்கிறார்.

முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள பாரத் சேவாஷ்ரம் சங்கத்தின் பெல்டங்கா அலகுடன் தொடர்புடையவரான கார்த்திக் மகராஜ், இந்த புகாரை மறுத்து, தனது “பெயரையும் புகழையும் கெடுக்க நடக்கும் சதி” என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து நபகிராம் காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரில், 2012 டிசம்பரில் மகராஜும் தானும் சந்தித்ததாகவும், அப்போது ஆசிரமத்தின் சானக் ஆதிவாசி அபாசிக் பாலிகா வித்யாலயா பள்ளியில் வேலை வாங்கி தருவதாக மகராஜ் உறுதியளித்ததாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.

2013 ஜனவரியில், விரைவில் வேலை கிடைக்கும் என்ற உறுதியுடன் பள்ளி விடுதியில் தங்கியதாகவும் பாதிக்கப்பட்டவர் கூறினார். “ஆனால், அவர் கிட்டத்தட்ட தினமும் என்னை வளாகத்தின் ஐந்தாவது மாடியில் உள்ள ஒரு அறைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்வார்” என்று தனது புகாரில் அப்பெண் விவரித்துள்ளார்.

“ஒருமுறை, மகராஜ் என்னை அழைத்து ஐந்து நாட்கள் அவரது ஆசிரமத்தில் தங்குமாறு கூறினார். அங்கும் என்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் வீட்டிற்கு திரும்புமாறு கூறி, மாதந்தோறும் பணம் அனுப்புவதாக உறுதியளித்தார்,” என்றும் அப்பெண் தெரிவித்தார்.

2013 இல் தான் கர்ப்பமான பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர் சில பள்ளி ஊழியர்களுடன் சேர்ந்து, பெர்ஹாம்பூரில் உள்ள ஒரு தனியார் நர்சிங் வசதிக்கு கருக்கலைப்புக்காக அழைத்து சென்றதாக பாதிக்கப்பட்டவர் குற்றம் சாட்டினார். “நான் கருக்கலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, ​​அவர் என்னை மிரட்டினார். இரண்டு பள்ளி ஊழியர்கள் முன்னிலையில், அவர் மருத்துவமனையில் ஒரு மருத்துவரிடம் பேசி, கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்தார்,” என்று அவர் கூறினார்.

கடந்த ஜூன் 12 அன்று தான் துறவியை மீண்டும் அணுகியதாகவும், ஜூன் 13 ஆம் தேதி மாலை 7 மணிக்கு பெர்ஹாம்பூரில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் காத்திருக்குமாறு கூறினார். இரண்டு பேர் என்னை அழைத்துச் செல்ல வருவார்கள் என்றார். அந்த இருவர் வந்து அவர்கள் வாகனத்தில் நான் ஏறியதும், அவர்கள் என்னை மிரட்டி, மகராஜை மீண்டும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கூறினர். அத்துடன் என்னை தவறான வார்த்தைகளால் திட்டி, வாகனத்திலிருந்து தள்ளிவிட்டனர்,” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.

கார்த்திக் மகராஜ் தன் மீதான குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ளார். “காலம் எல்லாவற்றையும் வெளிப்படுத்தும். என் பெயரையும் புகழையும் கெடுக்க நடக்கும் சதி இது. எங்கள் ஆசிரமத்தில் ஏராளமான பெண்கள் பணியாற்றுகிறார்கள், பல பெண் சீடர்களும் உள்ளனர். அவர்களை கேளுங்கள். நாங்கள் பெண்களை எங்கள் தாய்மார்களை போல் மதிக்கிறோம் என்று எல்லோரும் சொல்வார்கள்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.