டிஎன்பிஎஸ்சி எழுதுறீங்களா? புதிய தலைவர் பிரபாகர் ஐ.ஏ.எஸ். சொன்ன குட் நியூஸ்

Published:

இன்று தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு முதல் பி.ஹெச்.டி வரை படித்தவர்களின் கனவாக இருப்பது அரசு வேலை. எப்படியாவது அரசு வேலை பெற்று வாழ்க்கையில் செட்டிலாகிவிட வேண்டும் என அயராது உழைத்து படித்து அதற்குரிய தேர்வுகளில் எழுதி வெற்றி வாகை சூடி அரசுப் பணியில் அமர்கின்றனர் இளம் தலைமுறையினர். பொதுவாகவே டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதி முடித்து விட்டு தேர்வு முடிவுகள் என்பது மிகுந்த காலதாமதம் ஆகிறது. இந்தக் காலதாமதத்தின் போது அடுத்தடுத்து அரசுத் தேர்வுகளும் வருவதால் மாணவ, மாணவியர் குழப்பத்தில் ஆழ்ந்து விடுகின்றனர்.

ஒன்று புதிய தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும், பழைய தேர்விலும் தேர்ச்சி பெற்று விடுகின்றனர். இதனால் மற்றொருவரின் வேலை வாய்ப்பு பறிக்கப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் தேர்வு முடிவுகள் காலதாமதம் ஆவதே. தற்போது இதற்கான தீர்வு கிடைத்துள்ளது.

தமிழ்நாடு அரசின் வருவாய் நிர்வாக ஆணையாளராகப் பணியாற்றிய பிரபாகர் ஐ.ஏ.எஸ் தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டார். இந்நிலையில் புதிதாகப் பதவியேற்றிருக்கும் பிரபாகர் ஐ.ஏ.எஸ் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து கதறி அழுத தங்கத்துரை.. வாழை படம் பார்த்து எமோஷனல் ஆன தருணம்..

அதில், டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் உள்ள அனைத்து குளறுபடிகளும் படிப்படியாகச் சரிசெய்யப்படும். முக்கியமாக தேர்வு முடிவுகள் காலதாமதம் ஆவதால் அடுத்த தேர்விலும் தேர்ச்சி பெற்று இரண்டு பணிகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதால் மற்றொருவருக்கு அரசு வேலை கிடைக்காமல் போய்விடுகிறது. இதனைக் களையும் நோக்கில் தேர்வு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும். மேலும் மத்திய அரசுப் பணிகளின் தேர்வுகளின் அட்டவணையையும் பார்த்து இனி அதற்கேற்றவாறு உத்தேச அட்டவணை வெளியிடப்படும்.

13 உறுப்பினர்கள், ஒரு தலைவரைக் கொண்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தற்போது 9 உறுப்பினர்களும், தலைவரும் பொறுப்பில் உள்ளனர். பிரபாகர் ஐ.ஏ.எஸ்-ன் இப்பதவியில் 6 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை பணியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உங்களுக்காக...