ஆட்டை கடித்து மாட்டை கடித்து அமெரிக்காவை கடிக்கும் பாகிஸ்தான்.. கனடாவில் கைதான பாகிஸ்தான் தீவிரவாதி..!

  அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் உள்ள யூத வழிபாட்டு மையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்த சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு பாகிஸ்தான் இளைஞர் கனடாவில் பிடிபட்ட நிலையில் அவர் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை…

usa vs pak

 

அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் உள்ள யூத வழிபாட்டு மையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்த சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு பாகிஸ்தான் இளைஞர் கனடாவில் பிடிபட்ட நிலையில் அவர் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை FBI உறுதி செய்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் பெயர் முகம்மது ஷாஸேப் கான் என்றும் அவருக்கு 20 வயது என்றும், IS பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக இந்த தாக்குதலைத் திட்டமிட்டதாக நம்பப்படுகிறது. கடந்த 2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலின் ஆண்டு விழாவை ஒட்டி, இந்தத் தாக்குதலை நடத்த அவர் திட்டமிட்டிருந்தார். கனடாவில் கடந்த செப்டம்பர் மாதம் அவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

ஷாஸேப் கான் நியூயார்க் சென்று புரூக்ளினில் உள்ள யூத வழிபாட்டு மையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும், இதற்காக சிலமுறை அவர் அமெரிக்காவிற்கு வந்துள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அமெரிக்க மற்றும் கனடா அதிகாரிகளின் ஒருங்கிணைந்த முயற்சியால் இந்தத் தீவிரவாத சதித் திட்டம் அம்பலமானது என்று கூறப்படுகிறது.

FBI அதிகாரிகளின் சிறந்த பணியும், எங்கள் நட்பு நாட்டின் உதவியுடன் இந்த சதித்திட்டம் வெளிச்சத்திற்கு வந்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என FBI தலைவர் காஷ் பட்டேல் கூறினார். இது தொடர்ச்சியான உலகளாவிய பயங்கரவாத அச்சுறுத்தலையும், யூத சமூகங்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களின் அலாரமாக பார்க்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

கனடா-அமெரிக்க எல்லையில் இருந்து சுமார் 19 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆம்ஸ்டவுனில் கனடா அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முகம்மது ஷாஸேப் கான், ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்கு உதவி செய்ததாகவும், பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளதாகவும் சாட்டப்பட்டுள்ளார். இவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவியும் நிதி உதவியும் அமெரிக்கா அவ்வப்போது அளித்து வரும் நிலையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் தங்கள் நாட்டிற்கு ஆபத்து என்பதை தற்போது அமெரிக்கா அரசு உணர்ந்து இருக்கும் என்றும், இனிமேலாவது பாகிஸ்தானுக்கு ஆயுதம் மற்றும் நிதி உதவி கொடுப்பதை நிறுத்திவிட்டு பாகிஸ்தானை கண்டிக்க வேண்டும் என இந்திய நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்