நள்ளிரவு 2.30 மணிக்கு ராணுவ தலைவரை திடீரென அழைத்த பாகிஸ்தான் பிரதமர்.. அட்டாக்கை ஒப்புக்கொண்டதாக தகவல்..!

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பாகிஸ்தானில் உள்ள பல முக்கிய விமான நிலையங்கள் மீதுஇந்தியா குண்டு வீசி தாக்கியது குறித்து முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளார். அவர் இதுகுறித்து நள்ளிரவு 2:30 மணியளவில் ராணுவ…

pakistan
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பாகிஸ்தானில் உள்ள பல முக்கிய விமான நிலையங்கள் மீதுஇந்தியா குண்டு வீசி தாக்கியது குறித்து முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளார். அவர் இதுகுறித்து நள்ளிரவு 2:30 மணியளவில் ராணுவ தலைவர் ஜெனரல் ஆசிம் முனீர் தொலைபேசியில் இந்தியா தாக்கியதாக தன்னிடம் தகவல் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.இது குறித்து ஒரு  கூட்டத்தில்  பேசிய ஷெரீப், “ஜெனரல் ஆசிம் முனீர் பாதுகாப்பான தொலைபேசி வழியாக என்னை நடுத்தர இரவில் அழைத்து  இந்த தாக்குதல் குறித்து தெரிவித்தார்” என்று தெரிவித்தார்.

இந்த வீடியோவை பகிர்ந்துள்ள பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மல்வியா, “ஜெனரல் ஆசிம் முனீர் இரவு 2:30 மணிக்கு ஷெரீப்பை அழைத்து, நூர்கான் விமான தளத்தை மற்றும் பிற இடங்களை இந்தியா குண்டு வீசியதாக நேரடியாக தெரிவித்தார். இது ‘ஆபரேஷன் சிந்தூரின்’ அளவை, துல்லியத்தையும், தைரியத்தையும் வெளிப்படுத்துகிறது,” எனக் குறிப்பிட்டார்.

பஹல்‌காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலாக, மே 7,8  இரவில், இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம்,  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த நடவடிக்கை எவ்வித பதற்றத்தை உருவாக்கும் நோக்கத்துடன் அல்ல என்றும், பாகிஸ்தானின் ராணுவ மற்றும் பொதுமக்கள் அமைப்புகளை தாக்கவில்லை என்றும் இந்தியா தெரிவித்தது.

ஆனால் இந்தியாவின் கூற்றை பாகிஸ்தான் புறக்கணித்து, மே 8-9 மற்றும் 9-10 இரவுகளில்,  சர்வதேச எல்லை அருகிலுள்ள பல மாவட்டங்களில் இந்திய ராணுவ மற்றும் பொதுமக்கள் இடங்களை குறிவைத்து, சுழற்சி ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. ஆனால், இந்தியாவின்  AI தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் விமான பாதுகாப்பு அமைப்பு, ஆகாஷ் மற்றும் S-400 ஏவுகணை  உதவியுடன், நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை அழித்து திட்டத்தை தோல்வியடைய செய்தது.

பாகிஸ்தானின்  தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியா மிக கடுமையான முறையில் எதிர் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் ஆழ்பகுதியில் உள்ள பல விமானத்தளங்களை தாக்கி, அவர்களின் ராணுவ தளங்களை அழித்தது.

ஆனாலும் பாகிஸ்தான்  ‘Fatah’ ஏவுகணைகளை இந்திய நகரங்களை நோக்கி ஏவியது.  இதுவும் இந்தியாவின் வலுவான விமான பாதுகாப்பு முறைமையால் தடுப்புக் கொள்ளப்பட்டது. டெல்லியை நோக்கி வந்த ஒரு Fatah ஏவுகணை, ஹரியானாவின் சிரா பகுதியில் தடுக்கப்பட்டது.

இந்த நிலையில் பாகிஸ்தானின் நிதி அமைச்சர் இஷாக் டார், பாகிஸ்தான் விமானப்படையை பாராட்டும் ஒரு சர்வதேச செய்தித்தாளின் கட்டுரையை நாடாளுமன்றத்தில் வாசித்தார். இங்கிலாந்தை சேர்ந்த The Daily Telegraph பாகிஸ்தான் விமானப்படையின் சாதனையை புகழ்ந்தார். ஆனால், சில மணி நேரத்திலேயே பாகிஸ்தானின் Dawn என்ற ஊடகம், அந்த கட்டுரை AI-யால் உருவாக்கப்பட்ட போலி என்பதை  நிரூபித்து டாரின் பதவிக்கே கேள்வி எழுப்பியது.

மொத்தத்தில் இந்தியா தாக்கியதை முதல்முறையாக பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது என்பதும், பாகிஸ்தானின் தாக்குதலால் இந்தியாவுக்கு எந்த ஒரு சிறு சேதமும் ஏற்படவில்லை என்பதும் தற்போது உண்மையாகியுள்ளது.