இதெல்லாம் சாப்பிட்டா இவ்ளோ ஆரோக்கியமா? அட இத்தனை நாளா இது தெரியாமப் போச்சே!

காலத்துக்கும் நாம் உணவு என்றால் ஏதோ ஒண்ணு. வயிற்றுப் பசிக்கு சாப்பிடுகிறோம் என ஒரே உணவையே திரும்ப திரும்ப சாப்பிடுகிறோம். அதில் பெரும்பாலும் அரிசி வகை உணவாகத் தான் இருக்கிறது. குழம்பு வகைகளில் சில…

காலத்துக்கும் நாம் உணவு என்றால் ஏதோ ஒண்ணு. வயிற்றுப் பசிக்கு சாப்பிடுகிறோம் என ஒரே உணவையே திரும்ப திரும்ப சாப்பிடுகிறோம். அதில் பெரும்பாலும் அரிசி வகை உணவாகத் தான் இருக்கிறது. குழம்பு வகைகளில் சில காய்கறிகள் இருக்கும்.

அதிலும் தக்காளி முக்கிய இடத்தை வகிக்கும். இஞ்சி, கேரட், மிளகு போன்றவற்றையும் அந்தந்த குழம்புகளுக்கு ஏற்ப கொஞ்சம் கொஞ்சம் சேர்த்துக் கொள்வோம். காலையில் வெண்பொங்கல் என்றால் அதில் கட்டாயம் மிளகு இடம்பெற்றிருக்கும். ஏனென்றால் பச்சரிசியில் தான் பொங்கல் வைப்பார்கள். அது அதிகம் நாம் சாப்பிட்டால் அஜீரணம் ஏற்படும்.

அதைச் சரிசெய்யவே மிளகுவையும் நாம் அதனுடன் சேர்த்து சாப்பிடுகிறோம். நம் முன்னோர்கள் எப்பவுமே அறிவுப்பூர்வமாகவே ஒவ்வொரு விஷயத்தையும் செய்து வந்தார்கள் என்பதற்கு இந்த ஒரு உதாரணம் அல்ல. ஏராளமாக உள்ளது.

ஆனாலும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்தானே. அதே போல ஒவ்வொரு வகையான காய்கறி, பழங்களிலும் ஒரு ஒரு சத்து உள்ளது. அது நம் உடலின் பாகங்களில் எவை எவைக்கு நல்லதுன்னு ஒரு லிஸ்டே இருக்கு. பார்க்கலாமா…

முட்டை மூளைக்கு நல்லது. தண்ணீர் சிறுநீரகங்களுக்கு நல்லது. முட்டைக்கோஸ் கல்லீரலுக்கு நல்லது. வெள்ளரிக்காய் சருமத்திற்கு நல்லது. ஆரஞ்சு பெருங் குடலுக்கு நல்லது. கேரட் கண்களுக்கு நல்லது. இஞ்சி நுரையீரலுக்கு நல்லது. அவகேடோ இதயத்திற்கு நல்லது.

புதிய தக்காளி புரோஸ்டேட்டுக்கு நல்லது. சிவப்பு மிளகு நுரையீரலுக்கு நல்லது. பச்சை பீன்ஸ் எலும்புகளுக்கு நல்லது. உடற்பயிற்சி உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நல்லது. தர்பூசணி விறைப்புத்தன்மைக்கு நல்லது.