பட்டும் திருந்தாத பாகிஸ்தான்.. இந்திய விமானங்கள் பறக்க மீண்டும் தடை..!

  ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பஹல்‌காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் இந்தியா எடுத்த நடவடிக்கைகளுக்கு பதிலாக, பாகிஸ்தான் கடந்த மாதம் தனது வான்வழியை இந்திய விமானங்களுக்கு தடை செய்தது. இந்த தடை ஒரு…

airspace

 

ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பஹல்‌காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் இந்தியா எடுத்த நடவடிக்கைகளுக்கு பதிலாக, பாகிஸ்தான் கடந்த மாதம் தனது வான்வழியை இந்திய விமானங்களுக்கு தடை செய்தது. இந்த தடை ஒரு மாதத்திற்கு, அதாவது மே 23 வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பின் விதிகளின்படி, ஒரே நேரத்தில் ஒரு மாதத்திற்கு மேல் வான்வழி தடையை விதிக்க முடியாது என்பதால், பாகிஸ்தான் தற்போது அந்தத் தடையை மறுபடியும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது..

தடை நீட்டிப்பு குறித்து இன்று அல்லது நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும், அதன் பின்னர் விமான பயணிகளுக்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, மே 7ஆம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ கீழ் இந்தியா, பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரிலும் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது மேற்கொண்ட துல்லியமான தாக்குதல்களுக்கு பின் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி சிந்து நதிநீர் பெறுவது உள்பட மக்களுக்கு தேவையான விஷயங்களில் பாகிஸ்தான் கவனம் செலுத்தாமல் சீனா மற்றும் துருக்கி போன்ற நாடுகளின் பேச்சை கேட்டு இந்தியாவுடன் மீண்டும் விரோத போக்கை பாகிஸ்தான் வளர்த்து வருவதாகவும் இது பாகிஸ்தான் அரசுக்கு மட்டுமின்றி பாகிஸ்தான் மக்களுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

பாகிஸ்தான் வான் வெளியை தடை செய்வதால் இந்திய விமானங்களுக்கு கூடுதலாக எரிபொருள் செலவு மட்டும்தான் ஆகும். ஆனால் பாகிஸ்தான் இதே போன்ற பிடிவாத நிலையை தொடர்ந்தால் அந்நாட்டிற்கு தான் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் என்றும் எச்சரித்து வருகின்றனர். பட்டும் திருந்தாத பாகிஸ்தான் இன்னும் சரியான நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறி வருகிறது என்றுதான் நாட்டின் மீது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.