இந்தியாவில் இப்போது வைஃபை வேகம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் 6 G ஸ்பெக்ட்ரம் அம்சத்தை அரசு அனுமதிக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 500 MHz கூடுதல் ஸ்பெக்ட்ரம் கிடைக்கும், இதனால் இன்டர்நெட் வேகம் மற்றும் நெட்வொர்க் திறனில் அதிகரிப்பு ஏற்படும்.
தொலைத்தொடர்புத் துறை இதற்கான மசோதா விதிகளை வெளியிட்டு, ஜூன் 15 வரை பொதுமக்களிடமிருந்து கருத்துகளை கேட்கிறது. அதன் பின்னர், இந்த விதிகள் நடைமுறைக்கு வரும்.
6G அம்சத்தால் ஏற்படும் பயன்கள்:
மசோதாவின்படி, 5925 MHz முதல் 6425 MHz வரை இந்த விதிகள் பொருந்தும்.
5G வைஃபை வேகம்: 1.3 Gbps
6G வைஃபை வேகம்: 9.6 Gbps வரை செல்லும் வாய்ப்பு!
அமெரிக்கா, இங்கிலாந்து, தென்கொரியா உள்ளிட்ட 84 நாடுகள் ஏற்கனவே இந்த 6G Wi-Fi பயன்பாடு உள்ளன. இந்தியாவில் இதுவரை அதிகபட்சமாக 5G அம்சங்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. இந்த சூழலில் 6G அம்சத்தால் AR/VR, ஹைஸ்பீட் கேமிங், ஸ்மார்ட் சாதனங்கள் போன்ற புதிய தொழில்நுட்பங்களுக்கு தீர்வாக அமையும்.
ITU-APT Foundation of India இந்த முடிவை “தூரதரிசனமான” தீர்வாக வரவேற்றுள்ளது. இது Wi-Fi 6E, Wi-Fi 7 போன்ற புதிய தலைமுறை வைஃபை தொழில்நுட்பங்களுக்கான வழி வகுப்பதாக கூறப்பட்டுள்ளது.
IAFI தலைவர் பாரத் பாட்டியா இதுகுறித்து கூறியபோது, ‘6G என்பது இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலத்துக்கான ஒரு மிகப்பெரிய முன்னேற்றம். ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட நாடுகள் 6G வசதியை கொண்டுள்ள நிலையில், இந்தியா அவர்களுடன் இணைகிறது.” என்றார்.
Broadband India Forum இந்த அறிவிப்பை “நீண்ட காலமாகக் காத்திருந்த ஒரு தேவையான தீர்வு” என்றும் வரவேற்றது. ஆனால், மொத்தமாக 660 MHz வரை டீ-லைசென்ஸ் செய்ய வேண்டிய தேவை உள்ளது என்றும் கூறியுள்ளது.
BIF தலைவர் டி.வி. ராமச்சந்திரன் இதுகுறித்து கூறியபோது, ‘“இந்த 500 MHz பகுதியில் மட்டுமே சிக்கிக் கொள்வது போதாது. முழுமையான மாற்றத்தை அடைய இன்னும் கூடுதல் 160 MHz டீ-லைசென்ஸ் செய்ய வேண்டும். இது Wi-Fi 6E, Wi-Fi 7 போன்ற தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும்.” என்றார்.
6G வசதி எதற்கெல்லாம் பயன்படும்?
4K ஸ்ட்ரீமிங்
AR/VR
இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) சேவைகள்
ஹை-ரெசலூஷன் வீடியோ கான்பரன்ஸ்
ஸ்மார்ட் பள்ளிகள், மருத்துவமனைகள், நகரங்கள், கிராமங்கள்
இந்த 6G ஸ்பெக்ட்ரம் இந்தியாவின் விக்சித் பாரத் (Viksit Bharat) திட்டக் கனவை நனவாக்கும் தூணாக மாறும் என்று கூறப்படுகிறது.