மூத்த இராணுவ தலைமை அதிகாரிகள், அதாவது இராணுவத் தலைவர் ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படைத் தலைவர் அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி மற்றும் விமானப்படை தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் ஆகியோர் நேரடியாக இந்த நடவடிக்கையை வழிநடத்தினர்.
இந்திய இராணுவம் வெளியிட்ட படங்களில், மே 6-7 இரவின் போது மூத்த இராணுவத் தலைவர்கள் “ஆபரேஷன் சிந்தூர்” வார் ரூமில் இருப்பது காணப்படுகிறது. அந்த இரவில் இந்திய ஆயுத படைகள், பாகிஸ்தானும், பாகிஸ்தானின் பயங்கரவாத தளங்களை அதிரடி தாக்குதல் மூலம் அழித்தன.
இந்த தாக்குதலை நேரலையில் முப்படை ராணுவ அதிகாரிகள் பார்வையிட்டு வழி நடத்தியதாகவும் தாக்குதல்கள் துல்லியமாக நடந்த பின்னர் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் படைகள் பாகிஸ்தானுக்குள் இறங்கி பின்லேடன் இருக்கும் இடத்தை சுற்றி வளைத்து பின்லேடனை உயிரோடு பிடிப்பது வரை அன்றைய அமெரிக்க அதிபர் ஒபாமா தன்னுடைய அலுவலகத்தில் இருந்து வீடியோ காட்சிகளை பார்வையிட்டார். அதே பாணியில் தான் இந்திய ராணுவ வீரர்களும் பாகிஸ்தானுக்கு உள்ளே சென்று தாக்குதல் நடத்தியதை பார்வையிட்டு வழி நடத்தி உள்ளது. எனவே அமெரிக்காவுக்கு நிகராக இந்தியாவும் இருப்பதை காட்டுகிறது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.