சமீப காலமாக, சமூக ஊடகங்களில் ஆச்சரியமான சில வீடியோக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேபாளத்தில் இருந்து வெளிவந்துள்ள ஒரு வீடியோவில், ஒரு காண்டாமிருகம் திருமண விழா நடக்கும் இடத்தில் நுழைவதை காண முடிகிறது. உண்மையிலேயே திருமண வீட்டில் இது ஒரு எதிர்பாராத விருந்தினராக பார்க்கப்படுகிறது.
இந்த வீடியோ, இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டது. சிட்வான் தேசிய பூங்காவிலிருந்து வந்ததாக நம்பப்படும் இந்த ஒற்றைக் கொம்பு கொண்ட காண்டாமிருகம், நன்கு அலங்கரிக்கப்பட்ட திருமண நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குள் நுழைந்து, தோட்டப்பகுதியில் அமைதியாக நடந்து செல்கிறது. இதை பார்த்த விருந்தினர்கள், அதிசயத்தோடும் நகைச்சுவையோடும் அந்த தருணத்தை அனுபவித்தனர்.
இந்த காண்டாமிருகத்தால் திருமண வீட்டாருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், சில நிமிடங்களில் அதுவாகவே திருமணம் நடைபெறும் இடத்தில் இருந்து அமைதியாக போய்விட்டது என்றும் கூறப்படுகிறது. இதனால் சில நிமிடங்கள் மணமக்கள் உள்பட திருமண வீட்டார் அதிர்ச்சி அடைந்தாலும் நல்லவேளையாக எந்தவித விபரீதமும் ஏற்படவில்லை.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகியதிலிருந்து, 10 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது. வழக்கம்போல, கமெண்ட் பகுதியில் நகைச்சுவையான கருத்துக்கள் நிறைந்திருந்தன.
ஒருவர் எழுதியதாவது: “இது தான் ‘வைல்ட் கார்ட் என்ட்ரி!”
மற்றொருவர்: “அவன் திருமண வீட்டில் எல்லாம் ஓகேவா என சோதனையிட தான் வந்திருக்கான் என்று பதிவு செய்துள்ளார்.
மேலும் ஒருவர் நகைச்சுவையாக: “மணமகன் விருந்தினராக இருக்கலாம்’ என்று பதிவு செய்திருந்தார்.
இன்னொருவர்: “இது வேஜ் மேனுவில் என்ன இருக்கு என்று பார்க்க வந்திருக்கான் போல.”
இன்னும் சில கமெண்டுகள்:
“சீஃப் கேஸ்ட் தான் பாஸ்!”
“எந்த பக்கம் மாமா?”
“ஆசீர்வாதம் கொடுக்க வந்திருக்கான்.”
“விவிஐபிக்கு வழி விடுங்க!”
சிட்வான் தேசிய பூங்காவை சுற்றி 750 சதுர கிமீ பரப்பில் பபர் மண்டலம் உள்ளது, அங்கு சுமார் 45,000 குடும்பங்கள் வசிக்கின்றனர். அந்த பகுதிகளில், காண்டாமிருகங்கள் வழக்கமாக தெருக்களில் நடந்து செல்பதும், உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் சுற்றிக்கொள்வதும், வீடுகளில் முற்றத்தில் மேய்வதும் காணப்படும்.
1973ஆம் ஆண்டு இந்த பூங்கா உருவாக்கப்பட்ட போது, அங்கு 100க்கும் குறைவாகவே ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் இருந்தன. இன்று சிட்வானில் மட்டும் 700க்கு மேல் காணப்படுகிறது. இது நேபாளத்தின் மொத்த காண்டாமிருகங்களில் 90% ஆகும்.
https://www.instagram.com/reel/DKCe_QpyRmD/?utm_source=ig_web_copy_link