Nothing Phone 2 ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்யலாம்.. அமேசான் அதிரடி அறிவிப்பு..!

Published:

Nothing Phone 1 ஸ்மார்ட்போன்இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்ற நிலையில் வரும் ஜூலை மாதம் Nothing Phone 2 வெளியாக உள்ளது. இந்த நிலையில் அமேசான் நிறுவனம், Nothing Phone 2 ஸ்மார்ட்போனை முன் பதிவு செய்து கொள்ளலாம் என அதிரடியாக அறிவித்துள்ளது. இது குறித்த முழுமையான தகவல்களை தற்போது பார்ப்போம்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் வெளியிடப்பட்ட பிரபலமான Nothing Phone 1 ஸ்மார்ட்போனுக்கு அடுத்தபடியாக Nothing Phone 2 அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Snapdragon 8+ Gen 1 பிராஸசர் மூலம் இயக்கப்படும் என்று கூறப்படுவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் Nothing Phone 2 மாடல் ஸ்மார்ட்போன் அமேசானில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 12 முதல் அமேசான் இணையதளத்தில் அல்லது அமேசான் ஸ்டோர்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும், ஆனால் அதே நேரத்தில் இந்த முன்பதிவு வசதி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மட்டும் உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் உள்ளவர்கள் Nothing Phone 2 ஸ்மார்ட்போனை முன்கூட்டிய ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த ஃபோன் அமெரிக்காவில் $599 மற்றும் ஐரோப்பாவில் €599 என்ற விலையில் கிடைக்கும்.

நத்திங் ஃபோன் 2 இன் சில முக்கிய அம்சங்கள் இங்கே:

* வெளிப்படையான வடிவமைப்பு
* ஸ்னாப்டிராகன் 8+ ஜெனரல் 1 பிராஸசர்
* 6.55 இன்ச் OLED டிஸ்ப்ளே
* 50MP + 12MP + 5MP பின்புற கேமராக்கள்
* 16MP செல்பி கேமரா
* 4500mAh பேட்டரி
* ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்

மேலும் உங்களுக்காக...