மகளுடன் சேர்ந்து குழந்தை போல ஆட்டம் போடும் கமல்! வைரல் வீடியோ!

நடிகர் கமல்ஹாசனும் அவரது மகள் சுருதிஹாசனும் விக்ரம் பட பாடலுக்கு ஜாலியா எடுத்த ரீல்ஸ் வீடியோ தற்பொழுது டிரெண்டாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் நடித்த…

d0b4f7f8fcfa3763255ca6c3cfecc073 original

நடிகர் கமல்ஹாசனும் அவரது மகள் சுருதிஹாசனும் விக்ரம் பட பாடலுக்கு ஜாலியா எடுத்த ரீல்ஸ் வீடியோ தற்பொழுது டிரெண்டாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் நடித்த விக்ரம் படம் கடந்த ஆண்டு ஜூன் 3 அன்று வெளிவந்தது. மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான விக்ரம் திரைப்படம் ரிலீசான சில நாட்களில் பல்வேறு சாதனைகளை படைத்ததோடு 450 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் குவித்தது.

மேலும் உலக அளவில் ரூ. 625 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது. கமல் ஹாசன் நடித்த படங்களில் அதிக வசூலை ஈட்டிய படம் என்ற பெருமையை விக்ரம் படம் பெற்றுள்ளது.

இதற்கு முன்னர் நடிகர் கமல்ஹாசன் கடந்த 1986 ஆம் ஆண்டு விக்ரம் என்கிற படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் இளையராஜா இசையில் கமல்ஹாசனின் குரலில் விக்ரம் விக்ரம் என ஒலிக்கும் தீம் மியூசிக் மிகவும் பிரபலமானது. அந்த தீம் மியூசிக் ரீமிக்ஸ் செய்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் பயன்படுத்தி இருந்தார் அனிருத்.

இந்த ரீமிக்ஸ் செய்த தீம் மியூசிக்கும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

உதயநிதியின் மாமன்னன் படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா? சாதனை படைத்த படம்…

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

அந்த ரீல்ஸ் வீடியோவில் ஸ்ருதிஹாசன் இளையராஜா இசையமைப்பில் உருவான விக்ரம் பட தீம் மியூசிக் பின்னணியில் ஒலிக்க விட்டு அதனை ரசித்து கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இறுதியாக கமலஹாசன் என்ட்ரி கொடுத்து விக்ரம் என கத்துகிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் கமல் குழந்தையாகவே மாறிவிட்டதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.