பங்குச்சந்தை வரலாறு காணாத உச்சம்.. ஒரே மாதத்தில் 2000 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்..!

Published:

பங்குச்சந்தை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் சமீபத்தில் மிகப்பெரிய அளவில் உயர்ந்தது என்பதை பார்த்தோம். குறிப்பாக பங்குச்சந்தை ஜூன் 1ஆம் தேதி 62,,428 என்று இருந்த நிலையில் தற்போது 64 ஆயிரத்து 718 என்று உயர்ந்துள்ளது. அதாவது ஒரே மாதத்தில் 2000 புள்ளிகள் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் ரெப்போ வட்டி விகித உயர்வு இல்லாமல் இருப்பது ஆகியவை காரணமாக பங்கு சந்தை உயர்ந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் அமெரிக்க பங்கு சந்தையில் பாசிட்டிவாக இருக்கும் நிலையில் உலகம் முழுவதும் பங்குச்சந்தை பச்சை நிறத்தில் உள்ளது
பங்குச்சந்தையை பொருத்தவரை இனி ஏற்றம் தான் என்றும் தற்போது 64 ஆயிரம் இருக்கும் என்ற பங்குச்சந்தை இன்னும் ஒரு சில ஆண்டுகளில் 70 ஆயிரம் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே கடந்த ஐந்து வருடங்களில் பங்குச்சந்தையில் ரெகுலராக முதலீடு செய்தவர்கள் தற்போது மிகப்பெரிய லாபத்தை அடைந்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பங்குச்சந்தை என்பது ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் ஒரு வர்த்தகம் என்றாலும் நீண்ட கால வர்த்தகத்தை பொருத்தவரை பங்குச்சந்தை மிகப்பெரிய அளவில் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 2018 ஆம் ஆண்டு சென்செக்ஸ் வெறும் 35 ஆயிரம் மட்டுமே இருந்தது. ஆனால் கிட்டத்தட்ட இரு மடங்கு சென்செக்ஸ் உயர்ந்திருக்கிறது என்பது மிகப் பெரிய அளவில் பங்குத்தந்தையின் வளர்ச்சியை சுட்டிக்காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்செக்ஸ் மட்டுமின்றி நிப்டியும் 19 ஆயிரத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது பங்குச்சந்தை வர்த்தகர்களை மிகப்பெரிய மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் 52 வார உச்சபட்ச விலையில் இருப்பதால் சிலர் லாபத்தை புக் செய்வதற்காக வரும் திங்கட்கிழமை விற்பனை செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இதன் தான் காரணமாக பங்குச்சந்தை சிறிது சரிவில் இருந்தாலும் மீண்டும் பங்குச்சந்தை உயரம் என்று கூறப்படுகிறது.

இந்திய பொருளாதார நன்கு வளர்ச்சியடைந்து வருவதை அடுத்து இந்திய பங்குச் சந்தையில் தற்போது வெளிநாட்டு முதலீட்டாளர்களும் முதலீடு செய்ய தொடங்கிவிட்டனர் என்பதும் அதனால்தான் வாக்கு சந்து தொடந்து ஏற்றத்தில் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் இனி நல்ல காலம் தான் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் உங்களுக்காக...