கலாநிதி கொடுத்த கிப்ட்.. விதை போட்டது கமல், ரஜினி அல்ல.. நாட்டாமைதான் ஃப்ர்ஸ்ட்!

By Keerthana

Published:

இன்றைக்கு வேண்டுமானால் கலாந்தி மாறன் உள்பட பலரும் கார், காசோலை, தங்க காசு கொடுக்கலாம். ஆனால் அதனை சரத்குமார், 1994 இல் நாட்டாமை பட வெற்றியின் போதே செய்துவிட்டார். நாட்டாமை படம் வெற்றி பெற்றவுடன் சரத்குமார் அவர்கள் படத்தில் பணியாற்றிய 235 தொழில்நுட்ப கலைஞர்களுக்கு அரைப்பவுன் மோதிரம் பரிசளித்தார்.

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜெயிலர் திரைப்படம் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தை கொடுத்தது.

இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் வசூல் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்த நிலையில், ரூ.525 கோடி வசூலித்ததாக படத்தை தயாரித்த சன்பிக்சர்ஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

மேலும் ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன், நடிகர் ரஜினிகாந்தை தேடி சென்று மனம் நெகிழும் வகையில் காசோலை பரிசளித்ததுடன் பிஎம்டபிள்யூ காரும் பரிசளித்தார். ரஜினிக்கு மட்டுமின்றி இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்துக்கும் கலாநிதி மாறன் பரிசு வழங்கினார்.

ரஜினி, நெல்சனை தொடர்ந்து அனிருத்திற்க்கு சர்ப்ரைஸ் கொடுத்த கலாநிதிமாறன்! அப்போ தமன்னாவுக்கு?

இந்த நிலையில் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று நடந்தது. இதில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் பணியாற்றிய 300-க்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு தங்க நாணயத்தை பரிசாக வழங்கி கௌரவித்தார்.

 

இதை பார்த்த கமல்ஹாசன் ரசிகர்கள் பலர், இன்றைக்கு வேண்டும் என்றால் கலாநிதி மாறன் பரிசளித்திருக்கலாம். ஆனால் இதற்கு விதை கமல் சார் தான் போட்டார். விக்ரம் பட வெற்றிக்காக லோகேஷ் கனகராஜ்க்கு கமல் சொகுசு காரினை பரிசளித்தார் என்று கூறினார்கள்.

ஆனால் உண்மை என்னவென்றால் 1994ல் சரத்குமார், குஷ்பு, மீனா நடிப்பில் வெளியானது நாட்டாமை. இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்க, கே. எஸ். ரவிக்குமார் இயக்கினார். பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி ஓடியது. சரத்குமாரின் வாழ்வில் மிக முக்கியமான படமாக இன்றும் பார்க்கப்படுகிறது. இந்த படம் வெற்றி பெற்ற போது படத்தில் பணியாற்றிய 235 தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சரத்குமார் அரைப் பவுன் மோதிரம் பரிசளித்தார். எனவே இன்றைக்கு பரிசளிக்கும் கலாச்சாரத்திற்கு ஆரம்பம் சரத்குமார் தான் என அவரது ரசிகர்கள் கூறுகிறார்கள்.