ரஜினி, நெல்சனை தொடர்ந்து அனிருத்திற்க்கு சர்ப்ரைஸ் கொடுத்த கலாநிதிமாறன்! அப்போ தமன்னாவுக்கு?

நடிகர் ரஜினி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இன்றுவரை திரையரங்குகளில் மாஸ் காட்டி வருகிறது. ரஜினியின் அண்ணாத்த படத்தின் தோல்வியை தொடர்ந்து ஜெயிலர் படத்தின் வெற்றி ரஜினிக்கு கம்பேக் கொடுத்துள்ளது. தனது 72 வது வயதிலும் ரஜினி படத்தில் சூப்பர் எனர்ஜியுடன் துள்ளலாக நடித்து கலக்கியுள்ளார்.

நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் சுமார் ரூபாய் 200 கோடி முதல் ரூபாய் 240 கோடி வரையிலான பட்ஜெட்டில் தயாரான ஜெயிலர் படம் தற்பொழுது 550 கோடி ரூபாய்க்கு மேலாக வசூல் வேட்டை நடத்தி வருகிறது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிச்சர்ஸ் படத்தின் வசூல் குறித்து அப்டேட்களை வெளியிட்ட வண்ணம் உள்ளது.

  1. ஜெயிலர் படத்திற்காக ரஜினிகாந்துக்கு ரூபாய் 110 கோடி சம்பளம் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் படம் செம வசூல் வேட்டை நடத்தி வருவதால் லாபத்தில் இருந்து ரூபாய் 100 கோடியை சமீபத்தில் கலாநிதிமாறன் நடிகர் ரஜினிகாந்த்க்கு கொடுத்துள்ளார். அதை தொடர்ந்து ரஜினிக்கு பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 மாடல் காரை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியை தொடர்ந்து படத்தின் இயக்குனர் நெல்சனுக்கு தயாரிப்பு நிறுவனம் காசோலை ஒன்றை முதலில் கொடுத்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக 1கோடி 53 லட்ச ரூபாய் மதிப்புடைய ஸ்போர்ட்ஸ் மாடல் காரை பரிசாக வழங்கி சர்ப்பிரைஸ் கொடுத்துள்ளது.

இந்நிலையில் ஜெயிலர் படம் என்றாலே நம் நினைவிற்கு வருவது காவாலா, ஹுக்கும் பாடல்கள் தான். அனிருத் இசையில் பாடல்கள் பட்டி தொட்டி எல்லாம் தெறிக்க மாஸ் காட்டியது. ஜெயிலர் பட வெற்றிக்கு அனிருத்துக்கு பரிசு இல்லையா என நினைப்பதற்கு முன்னதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான கலாநிதிமாறன் தற்பொழுது இசையமைப்பாளர் அனிருத்துக்கு சர்ப்பிரைஸ் கொடுத்துள்ளார்.

இதில் அனிருத்திற்கு கலாநிதிமாறன் 3 கார்களை முன் நிறுத்தி விருப்பமான காரை தேர்ந்தெடுக்குமாறு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதில் அனிருத் இயக்குனர் நெல்சன் போலாவே ஸ்போர்ட்ஸ் மாடல் காரை தேர்ந்தெடுத்துள்ளார். தற்பொழுது அனிருத் தனது புதிய காரை ஒட்டி வரும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பட்டி தொட்டி எல்லாம் இனி நம்ம பாட்டு தான்… விஜய் படத்திற்காக தரமான சம்பவம் செய்யும் யுவன்!

ஜெயிலர் படத்தின் வெற்றிக்காக பரிசுகளை அள்ளி குவிக்கும் கலாநிதி மாறன் எதற்கு இன்னும் தமன்னாவுக்கு பரிசு வழங்கவில்லை என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. முதலில் ஜெயிலர் படத்தின் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்க்காத நிலையில் தமன்னா நடனமாடிய காவாலா பாடல் உலக அளவில் பிரபலமடைந்தது. அதனால் ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு தமன்னாவும் ஒரு காரணம் என ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...