தெலுங்குப்பட உலகில் சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி. இவருக்குப் பிறகு அல்லு அர்ஜூன் உள்பட பல நடிகர்கள் வந்தனர். இப்போது இளைஞர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் ஹீரோ விஜய் தேவரகொண்டா. இவர் சினிமா உலகில் கடந்து வந்த பாதையைப் பார்ப்போம்.
1989 மே 9ம் தேதி தேவாரகொண்டா கோவர்த்தன ராவ், மாதவி தம்பதியினருக்கு மகனாக ஹைதராபாத்தில் பிறந்தார் தேவரகொண்டா விஜய் சாய். நாகர்கொர்னூல் மாவட்டத்தில் உள்ள தொம்மபேட்டா தான் இவரது சொந்த ஊர்.
இவரது தந்தை கோவர்த்தன ராவ் சினிமா மேல உள்ள ஆசையில் சொந்த ஊரில் இருந்து ஹைதராபாத் வருகிறார். நடிக்க வாய்ப்பு தேடி அலைந்தார். ஆனால் ஏதும் கிடைக்காதபட்சத்தில் தூர்தர்ஷன் சீரியலில் அசிஸ்டண்ட் டைரக்டர் ஆனார். 1988ல் திருமணம் செய்கிறார். அதில் வெற்றி கிடைக்காததால் அதையும் விட்டு விடுகிறார். விஜய் அம்மா பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் இன்ஸ்டிட்யூட் வைத்து நடத்தி வருகிறார்கள்.
தேவரகொண்டா பள்ளிப் பருவத்திலேயே சினிமா மீது தணியாத ஆர்வம் கொண்டு இருந்தார். கல்லூரி
படிப்பு முடிந்ததும் சினிமா மேல் உள்ள ஆசை அதிகரிக்கிறது. அப்போது இவரது தந்தை உனக்கு எந்த பீல்டில ஆசை இருக்குன்னு கேட்கிறார். அதற்கு இதுதான் சமயம் என்று எண்ணிய தேவரகொண்டா சினிமா மேல தான் ஆர்வம்.
நான் நடிக்கணும்னு ஆசைப்படறேன்கிறார். அதற்கு நீ நடிகனாக ஆவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. உனக்கு நிறைய திறமை இருக்கு. அதை வைத்தே நீ நடிகனாகி விடலாம். என் பேரைப் பயன்படுத்தாதேன்னு சொல்லி விடுகிறார்.
அந்த சமயத்தில் தான் டைரக்டர் ரவிவாபோ நூவில்லா படத்துக்காக ஆடிசன்ஸ் நடத்தினார். அதைக் கேள்விப்பட்டு அங்கு சென்று ஆடிசன் கொடுக்கிறார். அதில் செலக்ட் ஆகிறார். அந்தப் படத்தில் சின்ன ரோல் நடிக்கிறார். ஆனால் பெரிய அளவில் பேர் கிடைக்கவில்லை.
பின்னர் சேகர் தமிழா இயக்கத்தில் லைப் இஸ் பியூட்டிஃபுல் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். அதன்பிறகு வாய்ப்புகள் வரவில்லை. சும்மா இருக்கப் பிடிக்காமல் கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்றவங்களுக்கு அம்மாவின் இன்ஸ்டிட்யூட்டில் கிளாஸ் எடுக்கிறார்.
பின்னர் மேடம் மேரினா என்ற குறும்படத்தை எடுக்கிறார். பிறகு பல குறும்படங்களில் நடிக்கிறார். தொடர்ந்து இயக்குனர் நாக் அஸ்வினின் நட்பு கிடைக்கிறது. அவரது இயக்கத்தில் விளம்பரப்படங்களில் நடிக்கிறார் விஜய் தேவரகொண்டா.
பின்னர் நானியை ஹீரோவா வச்சி எவடே சுப்பிரமணியம்கற படத்தை இயக்குகிறார். அதில் விஜய் தேவரகொண்டாவுக்கு முக்கியமான ரோல் கொடுக்கிறார். இந்தப் படத்தின் மூலம் சிறந்த நடிகர் ஆகிறார்.
அதன்பிறகு இந்தப் படத்தைப் பார்த்த இயக்குனர் தருண் பாஸ்கர் பில்லி சூப்லூ என்ற படத்திற்கு விஜயை ஹீரோவாக நடிக்கக் கேட்கிறார். கதை கேட்டு விஜயும் ஓகே சொல்கிறார். 2016ல் வெளியான இந்தப் படம் செம மாஸ் ஹிட்டாகிறது.
ஒரு கோடி பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் 30 கோடியை வசூல் செய்தது. தொடர்ந்து அர்ஜூன் ரெட்டி, கீத கோவிந்தம், நோட்டா என சிறந்த படங்களில் நடித்து தனக்கென தனி முத்திரையைப் பதிக்கிறார். அர்ஜூன் ரெட்டி படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது.