அதே வீடியோவில் ‘இந்த குறைகளை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக யாரும் ஏன் இல்லை? ஒவ்வொரு நாளும் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன, ஆனால் அத்தியாவசியமான கட்டமைப்புகள் புறக்கணிக்கப்படுகின்றன,” என்றார்.
அவரது குற்றச்சாட்டு பாகிஸ்தான் நிர்வாகத்தின் மீதான ஒரு பொதுவான விமர்சனமாக உள்ளது. வெற்று அறிவிப்புகள், புகைப்படக் காட்சிகள் மற்றும் வெளிநாட்டு கடன்கள் குறித்த செய்திகள் தான் முன்னணியில் இருக்கின்றன, ஆனால் உள்ளூர் கட்டமைப்பு மிக மோசமாக உள்ளது என அவர் சாடியுள்ளார்.
பாகிஸ்தானின் அணு பரிசோதனைகளை நினைவு கூறும் வகையில் ஒரு கொண்டாட்டத்தை கொண்டாடி வரும் நிலையில் விமான நிலையத்தில் கூட தண்ணீர் வழங்க முடியாத நிலை உள்ளதை அந்த நடிகை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.
இதுகுறித்து சமூக வலைத்தள பயனாளி ஒருவர் “அவங்க சொல்றாங்க ‘பாகிஸ்தானின் சாதனைகளை கொண்டாடணும்’. சாதனையா? IMF-லிருந்து 1 பில்லியன் டாலர் கடன் வாங்கினது, துருக்கியிலிருந்து 2 பில்லியன்?” மட்டுமே. கடன் வாங்கியதெல்லாம் ஒரு சாதனையா?
மற்றொருவர் ‘முதலில் சாதனை என்று ஒன்று இருந்தால் தானே அதை கொண்டாடனும்’ என்றார்.
பாகிஸ்தான் அரசியல்வாதி சையத் அலி ஸாஃபர் இதுகுறித்து பேசிய போது “நாம் இந்த நீர் நெருக்கடியை கவனிக்காமல் விட்டால் அடுத்தது பசியால் சாக வேண்டிய நிலை வரும்!” என்று எச்சரித்தார்.
பஹல்காமில் 26 பேரை பலிகொண்ட பயங்கர தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா வெறுமனே வார்த்தைகளில் அல்ல, செயலிலும் பதிலளித்தது. 65 ஆண்டுகள் பழமையான சிந்து நதிநீர் ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டது.
பிரதமர் மோடி, ஒரு கூட்டத்தில் பேசுகையில் “இந்தியாவின் ஒரு துளி நீரும் பாகிஸ்தானுக்கு கிடைக்காது.” என்று தெளிவாக கூறினார். மேலும் இந்தியரின் இரத்தத்துடன் விளையாடும் நாடு அதற்கான விலையை செலுத்தியே ஆக வேண்டும். உலகில் எவராலும் இதைத் தடுக்க முடியாது.” என்றார்.