பொன்னியின் செல்வன் 2 – திரை விமர்சனம்..!

By Bala Siva

Published:

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

இலங்கையில் இருந்து தஞ்சை வரும் அருள்மொழிவர்மன் மற்றும் வந்தியத்தேவன் ஆகிய இருவரும் கடலில் மூழ்கியதாக முதல் பாகம் முடிந்து இருந்த நிலையில் இருவரையும் ஊமை ராணி காப்பாற்றும் காட்சிகளுடன் இந்த படத்தின் அறிமுக காட்சி உள்ளது.

ps2 c  பொன்னியின் செல்வனை ஊமை ராணி காப்பாற்றி புத்த பிட்சுகளுடன் இருக்கிறார். அப்போது சோழர் குலத்தை அழிக்க பாண்டியர்களுடன் சூழ்ச்சியில் இயங்கும் நந்தினி ஆதித்த கரிகாலனை கடம்பூருக்கு வரவழைக்கிறார். கடம்பூர் சென்றால் தனக்கு ஆபத்து என்று தெரிந்தும் நந்தினியை தேடி செல்லும் ஆதித் கரிகாலன் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். அவரது கொன்றது யார்? ஊமை ராணியால் காப்பாற்றப்பட்ட அருள்மொழி வர்மர் தஞ்சை வந்து அரசராக பொறுப்பேற்றுக் கொண்டாரா? வந்தியத்தேவன் குந்தவை காதல் என்ன ஆச்சு ? உண்மையில் நந்தினி யார்? அவர் ஏன் ஆதித்த கரிகாலனை  கொலை செய்ய முயன்றார்? பொன்னியின் செல்வனை காப்பாற்றிய ஊமை ராணி யார்? என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடை அளிப்பது தான் பொன்னியின் செல்வன் 2 படத்தின்  கதை என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் பாகத்தில் அனைத்து கேரக்டர்களையும் மிகவும் அழகாக அறிமுகப்படுத்திய மணிரத்னம் இரண்டாம் பாகத்தில் அவரது அவர்களது கேரக்டரின் முக்கியத்துவத்தை ஒவ்வொரு காட்சிகளையும் ஏற்படுத்தி உள்ளார். ஜெய மோகன் மற்றும் இளங்கோ குமரவேல் ஆகியவர்களின் திரைக்கதை மிகவும் அழகாக அமைந்துள்ளது என்று சொல்லலாம். சில இடங்களில் படம் மெதுவாக நகர்ந்தாலும் படத்தின் விறுவிறுப்பு கொஞ்சம் கூட குறையவில்லை.

ps2 bநாவலில் சொல்லப்படும் ஆதித்த கரிகாலன் நந்தினி காதல் காட்சிகள் படத்தில் மிகவும் அழகாக படத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சோழர் குலத்தை பழி வாங்குவதில் நந்தினிக்கு இருக்கும் வன்மம்,  கடம்பூர் அரண்மனையில் ஆதித்த கரிகாலன் நந்தினியின் சந்திப்பு ஆகியவை உணர்ச்சிவாயமான காட்சிகள். அதேபோல் வந்தியத்தேவன் குந்தவை காதல் காட்சிகள் மணிரத்னத்தின் இளமை துடிக்கும் அளவுக்கு உள்ளது.

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் கூறாத சில விஷயங்களும் படத்தில் சேர்க்கப்பட்டுள்ளன என்பது ரசிகர்களுக்கு ஒரு ஆச்சரியமான அம்சமாக இருக்கும். பொன்னியின் செல்வன் நாவலை படிப்பவர்கள் அப்படியே படமும் இருக்கும் என்று எதிர்பார்த்தால் கண்டிப்பாக ஏமாற்றம் தான் அடைவார்கள்.

ps2 a

வந்தியத்தேவன் ஆழ்வார்கடியான் உரையாடல் நகைச்சுவையின் உச்சமாக இருக்கும் நிலையில் ஆதித்த கரிகாலன் அருள்மொழிவர்மன் நந்தினி ஆகியோரின் ஆளுமை படத்தின் மாஸ் காட்சிகளாக உள்ளன. ஆதித்த கரிகாலனின் வீரம் மற்றும் விரக்தியை விக்ரம் தன் கண்களிலேயே காட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜெயமோகனின் வசனங்கள் கதைக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது என்பதும் ஏஆர் ரகுமானின் இசை மிகச்சிறந்த அளவில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக மிகச் சிறப்பான அனுபவம் கிடைக்கும் என்பது உறுதி.

மேலும் உங்களுக்காக...