ரூ.60,000/- சம்பளத்தில் சென்னை மாநகர சுகாதார மையங்களில் வேலைவாய்ப்பு – 140 பணியிடங்கள்!

By Staff

Published:

சென்னை மாநகர சுகாதார திட்டத்தின் கீழ் நகர்புற நல்வாழ்வு மையங்களில் (Urban Primary Health Centers) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மெடிக்கல் ஆபிசர், நர்சுகள், பல்நோக்கு சுகாதார பணியாளர், உதவி அலுவலர் போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று (06.09.2024) கடைசி நாள் ஆகும். ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பணியிடங்கள் விவரம்:
மெடிக்கல் ஆபிசர் – 30 பணியிடங்கள்
ஸ்டாப் நர்ஸ் – 32 பணியிடங்கள்
பல்நோக்கு சுகாதார பணியாளர் – 12 பணியிடங்கள்
உதவி அலுவலர் – 66 பணியிடங்கள்

கல்வி தகுதி:
மெடிக்கல் ஆபிசர்: MBBS முடித்திருக்க வேண்டும்.
ஸ்டாப் நர்ஸ்: B.Sc Nursing / Diploma in Nursing முடித்திருக்க வேண்டும் மற்றும் நர்சிங் கவுன்சிலில் பதிவு அவசியம்.
பல்நோக்கு சுகாதார பணியாளர்: அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சி உடன் சுகாதார ஆய்வாளர் அல்லது சானிட்டரி இன்ஸ்பெக்டர் டிப்ளமோ (2 ஆண்டு) முடித்திருக்க வேண்டும்.
உதவி அலுவலர்: குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:
மெடிக்கல் ஆபிசர்: ரூ.60,000/-
ஸ்டாப் நர்ஸ்: ரூ.18,000/-
பல்நோக்கு சுகாதார பணியாளர்: ரூ.14,000/-
உதவி அலுவலர்: ரூ.8,500/-

வயது வரம்பு:
அனைத்து பணியிடங்களுக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இது ஒப்பந்த அடிப்படையிலான வேலைவாய்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஆஃப்லைனில், அதாவது தபால் மூலம், கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்:

விண்ணப்பிக்கவேண்டிய முகவரி: Office of the Member Secretary,
CCUHM / City Health Officer,
Public Health Department,
3rd Floor, Amma Maligai,
Greater Chennai Corporation,
Ripon Buildings, Chennai – 600003.

கடைசி நாள்: 06.09.2024.
மேலும் விவரங்களுக்கு:
விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவத்தைக் காண: அதிகாரப்பூர்வ லிங்க் https://chennaicorporation.gov.in/gcc/pdf/Application_UHWC.pdf கிளிக் செய்யவும்.

மேலும் உங்களுக்காக...