மைக்ரோசாஃப்டின் புதிய ‘Recall’ அம்சம்.. ஆபத்தும் உள்ளது.. ஆச்சரியமும் உள்ளது.. வரமா? சாபமா?

  நாம் அனைவரும் பலமுறை நினைத்திருப்போம், ‘ஏதோ ஒரு இணையதளத்தில் அந்த வீடியோவை பார்த்தேன்… ஆனா அதை bookmark பண்ண மறந்துட்டேன் அல்லது “எந்தப் பக்கத்தில் அந்த data chart பார்த்தேன் தெரியலையே…”  இப்படி…

recall

 

நாம் அனைவரும் பலமுறை நினைத்திருப்போம், ‘ஏதோ ஒரு இணையதளத்தில் அந்த வீடியோவை பார்த்தேன்… ஆனா அதை bookmark பண்ண மறந்துட்டேன் அல்லது “எந்தப் பக்கத்தில் அந்த data chart பார்த்தேன் தெரியலையே…”  இப்படி நினைவிழந்த தருணங்களை தவிர்க்க, மைக்ரோசாப்ட் தரும் புது அம்சம் தான் Recall.

மைக்ரோசாப்ட் தற்போது Windows-இன் புதிய வடிவமான Copilot PCs-இல் சோதனை நிலையில் உள்ள ஒரு அம்சம் Recall. உங்கள் கணினி உங்களைப் போலவே நினைவில் வைக்கிறது.  நீங்கள் திறந்த கோப்புகள், நீங்கள் பார்த்த இணையதளங்கள், நீங்கள் வேலை செய்த செயலிகள், இவை அனைத்தையும் அடிக்கடி ஸ்கிரீன்ஷாட் எடுத்து உங்கள் கணினியில் உள்ளடக்கி வைக்கிறது.

பின்னர், தேவையான தருணத்தில், சில வார்த்தைகள் அல்லது தேடல்களைக் கொண்டு நீங்கள் கடந்த செயல்களை நினைவூட்டிக் காணலாம். இது உங்கள் கணினிக்கு ஒரு நினைவாற்றல் போல் செயல்படுகிறது.

இந்த வசதியால் உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை நீங்கள் இல்லாத சமயத்தில் உங்கள் கம்ப்யூட்டரை இன்னொருவர் பயன்படுத்தினால் அதை தெரிந்து கொள்ளும் அபாயம் உள்ளது. ஆனால் நீங்கள் விரும்பினால், எப்போது வேண்டுமானாலும் இந்த வசதியை pause அல்லது turn off செய்யலாம். சேமிக்கப்படும் தகவல்கள் உங்கள் கணினியில் உள்ளேதான் பாதுகாப்பாக இருக்கும்.

இப்போதைக்கு Recall அம்சம்  Copilot Plus PCs எனப்படும், AI தொழில்நுட்பத்துக்கு ஏற்ற புதிய வகை Windows கணினிகளில் மட்டுமே உள்ளது. இது கூட, Windows Insider Program-இல் இருக்கும் டெஸ்டர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். அதாவது, சாதாரண பயனர்களுக்கு இது இன்னும் சில வாரங்கள் அல்லது மாதங்களில் மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

Recall வசதி குறித்து நெட்டிசன்கள் சிலர் கலவையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். உங்கள் கம்ப்யூட்டர் உங்களுடைய ஒவ்வொரு செயலையும் கண்காணிக்கிறது என்றால் அதை மெயிண்டன் செய்வதில் கவனம் வேண்டும். ஆனால் அது உங்கள் கணினியின் உள்ளேயே பாதுகாப்பாக இருக்கும் என்பதால், பாதுகாப்பாக வைத்திருப்பது நம்முடைய நன்மைக்கு தான் என்றும் கூறி வருகின்றனர்.

நாம் தினமும் கணினியில் ஆயிரம் செயல்களை செய்கிறோம். ஆனால் அவற்றில் பெரும்பாலானவை மறக்கப்பட்டு விடுகின்றன. கணினியில் உள்ள Histroy எல்லாவற்றையும் நமக்கு எடுத்து தராது. ஆனால் Recall தொழில்நுட்பம் முக்கியமான தகவலை தேட,  நேரத்தை சேமிக்க உதவக்கூடியவை.

மைக்ரோசாப்ட் தனது AI பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி உள்ளது. Recall அம்சம் நம்மை இன்னும் நுண்ணறிவு மிக்க டிஜிட்டல் வாழ்க்கைக்குள் இழுத்துச் செல்லும் ஒரு முன்னோடி ஆகும். இது வரமா? அல்லது சாபமா? என்பது நாம் உபயோகிக்கும் விதத்தில் தான் உள்ளது.