வெறும் 800 ரூபாய்க்கு கூகுளையே வாங்கிய இந்தியர்.. அதன்பின் நடந்தது தான் Twist..!

  டிஜிட்டல் உலகில், டொமைன் பெயர்கள் நாம் நினைத்தது போல் கிடைப்பது என்பது மிகவும் அரிது. அப்படியே இருந்தாலும் அவை அதிக மதிப்புள்ளவை, பல அடுக்குகளால் பாதுகாக்கப்பட்டவை. ஆனால், 2015ம் ஆண்டின் ஒரு  செப்டம்பர்…

google

 

டிஜிட்டல் உலகில், டொமைன் பெயர்கள் நாம் நினைத்தது போல் கிடைப்பது என்பது மிகவும் அரிது. அப்படியே இருந்தாலும் அவை அதிக மதிப்புள்ளவை, பல அடுக்குகளால் பாதுகாக்கப்பட்டவை. ஆனால், 2015ம் ஆண்டின் ஒரு  செப்டம்பர் இரவில், இந்தக் கோட்பாடுகள் அனைத்தையும் உடைக்கும் ஒரு சம்பவம் நடந்தது.

ஒரு நிமிடத்திற்கு, இந்தியர் சன்மய் வேத் என்பவர் உலகின் மிகப் பிரசித்தி பெற்ற டிஜிட்டல் முகவரியான Google.com-இன் உரிமையாளராக இருந்தார்!

முன்னாள் கூகுள் ஊழியரான சன்மய் வேத்  Google Domains தளத்தில் சும்மா உலாவி கொண்டிருந்த போது, கண்களுக்கு நம்ப முடியாததொரு விஷயம் தெரிந்தது: google.com வாங்கக் கூடியதாக இருந்தது!

முதலில் இது ஒரு பிழை அல்லது UI தவறு என்று நினைத்த அவர், Checkout-ஐ கிளிக் செய்தார். $12 அதாவது இந்திய மதிப்பில் வெறும் ரூ.804 கட்டணம் செலுத்தினால் கிடைக்கும் என காண்பித்தது. உடனே அவர் அதை வாங்கியவுடன் அவர் அந்த டொமைனை  வாங்கியதற்கான உறுதிப்படுத்தல் மின்னஞ்சல்களும் வர ஆரம்பித்தன. Dashboard-ல், “Owner: google.com” என்று வந்தது!

எனக்கு ஷாக். இந்த பரிவர்த்தனை நடந்துவிடும் என்று ஒருபோதும்  எதிர்பார்க்கவில்லை என சன்மய் வேத் ஒரு பேட்டியில் தெரிவித்தார். ஆனால் ஒருசில நிமிடங்களில் அவருக்கு சில நிர்வாக அனுமதிகள்,  admin dashboard கிடைக்கவில்லை. ஒரே ஒரு நிமிடத்தில், கூகுள் தவறை கண்டறிந்து, அவரது அனுமதிகளை திரும்பப் பெற்றது, அதுமட்டுமின்றி அவரது பரிவர்த்தனையை ரத்து செய்தது.

இருப்பினும் கூகுள் தங்களது கவனக்குறைவை ஒப்புக்கொண்டு உடனடியாக அந்த தொழில்நுட்ப பிழையை சரி செய்தது. அதுமட்டுமில்லை சன்மய் வேதின் நேர்மையும், நம்பிக்கையையும் பாராட்டிய கூகுள், அவருக்கு பரிசு அளிக்க முடிவு செய்தது. பரிசுத் தொகை எவ்வளவு என்பதை கூகுள் வெளியிடவில்லை. ஆனால் சன்மய், “இந்த தொகையை ஒரு இந்திய குழந்தைகள் நல நன்கொடைக்காக வழங்குங்கள்” எனக் கேட்டார். கூகுள், அவருடைய செயலை பாராட்டி அந்த நன்கொடையை இரட்டிப்பு செய்தது.

இந்த நிகழ்வில் கூகுள் தங்களது கவனக்குறைவை ஒப்புக்கொண்டதாலும், சன்மயும் அதனை நேர்மையாக கையாண்டதால் எந்தவித பிரச்சனையும் இன்றி சுமூகமாக முடிந்தது. இதில் இருந்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பாடம் என்னவெனில் நீங்கள் ஒரு டொமைன் வைத்திருந்தால் அதன் காலாவதி தேதிகளை மறக்காதீர்கள்.  ஒரு சில கிளிக்குகள் மற்றும் ₹800-க்குள் உங்கள் டொமைன் பறிபோக வாய்ப்புள்ளது.