அந்த பயம் இருக்கணும்.. எம்ஜிஆரால் 13 வருஷம் வனவாசம்.. விஜய்யால் 13 ஜென்மம் வனவாசமா.. திமுகவை பொளந்து கட்டிய பிரபலம்..!

  எம்ஜிஆர் அரசியல் கட்சி ஆரம்பித்ததால் 13 ஆண்டுகள் திமுக ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது போல, நடிகர் விஜய்யால் 13 ஜென்மங்கள் ஆனாலும் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாதோ என்ற பயம் திமுகவுக்கு…

mgr vijay

 

எம்ஜிஆர் அரசியல் கட்சி ஆரம்பித்ததால் 13 ஆண்டுகள் திமுக ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது போல, நடிகர் விஜய்யால் 13 ஜென்மங்கள் ஆனாலும் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாதோ என்ற பயம் திமுகவுக்கு வந்துவிட்டதாக தமிழ்நாடு இளைஞர் கட்சியின் காமேஸ்வரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களுக்கு சேவை செய்ய வருகிறேன் என்று சொல்லும் விஜய்யை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்று கேள்வி கேட்கும் திமுகவினர், விஜய்யை பார்த்து பயப்படுகிறார்கள் என்பது தான் உண்மை என்றும் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களின் ஒட்டுமொத்த ஆதரவும் விஜய்க்கு!

தமிழ்நாடு தற்போது விஜய்யை ஒரு அடையாளமாக பார்க்கிறது. ஒட்டுமொத்த ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் மட்டுமின்றி இளைஞர்களும் விஜய்க்கு அந்த அளவுக்கு பெரும் ஆதரவு இருப்பதால் தான் திமுக பயப்படுகிறது. இளைஞர்களின் ஒட்டுமொத்த வாக்குகளும் விஜய்க்குத்தான் விழும் என்றும் காமேஸ்வரன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

“இவர் என்ன எம்ஜிஆர் மாதிரி பெரிய நடிகராக இருந்து தலைவரானாரா? இவருக்கு என்று ஏதாவது கொள்கை இருக்கிறதா?” என்று திமுகவினர் கேள்வி எழுப்புவதன் மூலம், “உங்கள் மனதில் எம்ஜிஆர் போல் விஜய் ஆகிவிட்டாரோ என்ற பயம் தோன்றிவிட்டது. அடுத்த எம்ஜிஆர் என்ற அச்சம் காரணமாகத்தான் இப்படிப் பேசுகிறார்கள்,” என்று காமேஸ்வரன் திமுகவை சாடினார்.

எம்ஜிஆர் வரலாறு போல் விஜய் எழுச்சி?

எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடித்தபோது, 13 ஆண்டுகள் கருணாநிதி அவர்களால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை; எதிர்க்கட்சி தலைவராகத்தான் இருந்தார். எம்ஜிஆர் மறைந்த பின்னர்தான் அவரால் ஆட்சியை பிடிக்க முடிந்தது. அதைப்போல, விஜய்யும் வந்து விடுவாரோ என்ற அச்சம்தான் திமுகவுக்கு இருக்கிறது. எம்ஜிஆரால் 13 வருஷம் வனவாசம் இருந்தது போல், விஜய்யால் 13 ஜென்மங்கள் வனவாசம் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்ற அச்சம்தான் அவர்களுடைய பதட்டத்திற்கு காரணம் என்றும் காமேஸ்வரன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தியாக பாதையில் விஜய்!

விஜய் அரசியலுக்கு பணம் சம்பாதிக்க வரவில்லை. அவர் பணம் சம்பாதிப்பதை விட்டுவிட்டுதான் வருகிறார். திரையுலகில் அவர்தான் உச்சத்தில் இருக்கிறார். நூற்றுக்கணக்கான கோடி வருமானத்தை தியாகம் செய்து, தமிழ் திரையுலகில் தனது முதல் இடத்தையும் தியாகம் செய்துவிட்டு, மக்களுக்காக வருகிறார். விமர்சனங்களையும் அவர் ஏற்றுக்கொள்கிறார்; அசிங்கப்படுகிறார்; மோசமான பழிவாங்கும் நிலையையும் சமாளிக்கிறார். இப்படிப்பட்ட தன்மையுடையவர் தான் தலைவராக முடியும். ஆனால், “முப்பதாயிரம் கோடி ஊழல் நடந்திருக்கிறது என்று சொன்னவரை நீங்கள் எங்கே வைத்திருக்கிறீர்கள் என்று எங்களுக்குத் தெரியும்,” என்று அந்த பேட்டியில் காமேஸ்வரன் மறைமுகமாக பிடிஆரை குறிப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களுக்காகவே அரசியல்!

விஜய் அரசியலுக்கு வந்து சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் மக்களுக்காகத்தான் வருகிறார். மக்களுக்கான வசதிகளை செய்து கொடுக்கத்தான் வருகிறார். ஆட்சி அதிகாரம் இருந்தால்தான் மக்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய முடியும். அவருக்கு இனி பணம் தேவை இல்லை என்றும் காமேஸ்வரன் அந்த பேட்டியில் தெள்ளத்தெளிவாக தெரிவித்தார்.