பாகிஸ்தான் அரசியலில் முக்கியப் பங்கு வகிக்கும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மகள் மரியம் நவாஸ் பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட “ஆபரேஷன் சிந்து” பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாக வெளிப்படையாக கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில முதல்வரான அவர், மே 7 அன்று இந்தியா மேற்கொண்ட ராணுவ தாக்குதல்களை, கடந்த 2023ஆம் ஆண்டு மே மாத தாக்குதலுடன் ஒப்பிட்டார். அன்று பாகிஸ்தான் தேஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) ஆதரவாளர்கள் மேற்கொண்ட ராணுவ வளாகங்கள் மீதான தாக்குதல் போல் இந்தியாவின் தாக்குதல் இருந்ததாக அவர் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டு மே 9 அன்று, PTI கட்சி ஆதரவாளர்கள் பாகிஸ்தான் அரசின் முக்கிய ராணுவ கட்டிடங்கள், குறிப்பாக ராவல்பிண்டியில் உள்ள ஜெனரல் தலைமையகத்தை தாக்கினர். பின்பு அந்த நாள் “கருப்புநாள்” என அழைக்கப்பட்டது.
சர்கோதா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊக்கத்தொகை மற்றும் மடிக்கணினி வழங்கும் விழாவில் பேசிய மரியம் நவாஸ் இதுகுறித்து மேலும் கூறியதாவது: “2023 மே 9 மற்றும் 2025 மே 6–7 இல் இந்தியா செய்தது என்ற இரண்டுக்கும் பெரிதாகவே வேறுபாடு இல்லை.
இம்ரான் கான் தலைமையிலான PTI கட்சியை கடுமையாக விமர்சித்த அவர், இந்தியாவின் “ஆபரேஷன் சிந்தூர்” காரணமாக பாகிஸ்தான் ராணுவ உள்கட்டமைப்புக்கு ஏற்பட்ட தீவிர சேதத்தையும் ஒப்புக்கொண்டார்.
பாகிஸ்தான் அரசியல் தலைவர்களிடமிருந்து இவ்வகை அரிதான ஒப்புதல், அந்த ராணுவ நடவடிக்கையின் தாக்கத்தை வெளிப்படுத்துகிறது.
தொடக்கத்தில் பாகிஸ்தான் இந்த தாக்குதல்களை மறுத்திருந்தாலும், உண்மை பின்னர் வெளிவந்தது. இந்த இரு சம்பவங்களையும் ஒப்பிட்டு விளக்க முயன்றார் மரியம் நவாஸ்.
இந்தியாவின் “ஆபரேஷன் சிந்தூர்” தாக்குதலால் பாகிஸ்தானில் ஏற்பட்ட விளைவுகளை, பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீப் கடந்த சில நாட்களுக்குள் தானும் ஒப்புக்கொண்டிருந்தார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீப்பின் அரிதான ஒப்புதல்: “மே 10 அன்று, இந்தியாவின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் நூர் கான் விமான நிலையம் மற்றும் பிற இடங்களை தாக்கின. இது ‘ஆபரேஷன் சிந்தூரின் ஒரு பகுதியாகும். அந்த இரவு 2:30 மணிக்கு, ஜெனரல் ஆஸிம் முனீர் நேரில் எனக்கு அழைத்துச் சொல்லினார். அது மிகுந்த பதற்றமான தருணம்.” என்று தெரிவிட்திருந்தார்.
இதற்கு முன், பாகிஸ்தான், தங்களது JF-17 போர்விமானங்கள் இந்தியாவின் அடாம்பூர் விமானப்படைத் தளத்தில் உள்ள S-400 ஏர்வாத பாதுகாப்பு அமைப்பை அழித்ததாக கூறியது. ஆனால் பிரதமர் மோடி பின்னர் அந்த தளத்துக்கு சென்று ஆய்வு செய்தது, பாகிஸ்தான் கூறியதை நிராகரிக்கும் நடவடிக்கையாகவே பார்க்கப்பட்டது.
மேலும், இந்தியா பொதுமக்கள் மீது தாக்கியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டினாலும், சிந்து மாநில முதல்வர் பஹோலாரி விமானப்படைத் தளம் தாக்கப்பட்டதாகவும், இதில் 6 பாகிஸ்தான் விமானப்படை வீரர்கள் உயிரிழந்ததாகவும் தெரிவித்தார். இது இந்தியா தாக்கிய இடங்கள் ராணுவ இலக்குகளே என்ற இந்தியாவின் வாதத்திற்கு ஆதாரமாக அமைந்தது.