தன்னை காதலித்து திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து, பின்னர் தன்னை ஏமாற்றிவிட்டதாக பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில், “காதல் தோல்வி என்பது குற்றம் ஆகாது” என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரிசா நீதிமன்றத்தில், ஒரு பெண் தனது நண்பருடன் ஒன்பது ஆண்டு காலம் உறவில் இருந்ததாகவும், அப்போது தன்னை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்ததாகவும் கூறினார். ஆனால், பின்னர் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களால், திருமணம் செய்ய முடியாது என்று மறுத்துவிட்டதாக, அவர் வழக்கு பதிவு செய்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், “ஆணும் பெண்ணும் இணைந்து உறவில் இருந்தீர்கள். அது திருமணம் வரை செல்லாதது ஒரு தனிப்பட்ட விஷயமே தவிர, சட்டப்பூர்வமான குற்றம் அல்ல. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்” என அறிவித்துள்ளது.
மேலும், “ஆண் மற்றும் பெண் இருவரும் சம்மதித்தே காதலில் இருந்தீர்கள். இதில் யாராவது ஒருவர் திருமணம் செய்ய மறுக்கும்போது, அதை சட்ட குற்றமாக கருத முடியாது” என்று தீர்ப்பளித்தது. இந்த முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.