3வது மாடியில் இருந்து குதித்த நபர்.. இறந்துவிட்டார் என கருதிய நிலையில் நடந்த ஆச்சரியம்..!

  ஒடிசா   மாநிலத்தில், மூன்றாவது மாடியில் இருந்து குதித்த ஒரு நபர், கீழே விழுந்து மூச்சுப் பேச்சு இல்லாமல் இருந்த நிலையில், காவல்துறையினர் அருகில் சென்று பார்த்த போது திடீரென அந்த நபர் எழுந்து…

orissa man

 

ஒடிசா   மாநிலத்தில், மூன்றாவது மாடியில் இருந்து குதித்த ஒரு நபர், கீழே விழுந்து மூச்சுப் பேச்சு இல்லாமல் இருந்த நிலையில், காவல்துறையினர் அருகில் சென்று பார்த்த போது திடீரென அந்த நபர் எழுந்து நின்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தில், ஒரு நபர் மூன்றாவது மாடியில் நின்று கொண்டு, ஒரு கம்பை பற்றிக்கொண்டு கத்திக் கொண்டே இருந்தார். அவர் எந்த நேரத்திலும் கீழே விழுந்துவிடுவார் என்று பொதுமக்கள் பயந்த நிலையில், அவரை காப்பாற்ற காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வந்தனர்.

இந்த நிலையிலேயே, ஒரு கட்டத்தில் அவர் திடீரென மேலிருந்து கீழே விழுந்தார். அப்போது, இடையில் இருந்த ஹை-வோல்டேஜ் கம்பியின் மீது விழுந்ததால், எலக்ட்ரிக் ஷாக் அடித்து, தரைத்தளத்தில் உள்ள கூரை மேல் விழுந்தார். அவர் பேச்சும் மூச்சும் இல்லாததை பார்த்த அனைவரும் அவர் இறந்திருக்கலாம் என நினைத்தனர்.

அப்போது, காவல்துறை அதிகாரி ஒருவர் அருகில் சென்று பார்த்த போது, திடீரென அந்த நபர் எழுந்து நின்றார். இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவரை சமாதானப்படுத்தி கீழே அழைத்து வந்த காவல்துறையினர், சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

https://x.com/MeghUpdates/status/1893533639276741099