சட்டக்கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்.. வீடியோ எடுத்து மிரட்டல்.. மாணவர்களின் அட்டகாசம்.. இவனெல்லாம் நாளை ஜட்ஜ் ஆக வந்தால் நாடு என்ன ஆகும்?

  கடந்த ஆண்டு கொல்கத்தா மருத்துவ கல்லூரியில் நடந்த பாலியல் வன்கொடுமை, கொலை சம்பவத்தை நினைவூட்டும் விதமாக, கொல்கத்தாவின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவி, அதே கல்லூரியின்…

law college

 

கடந்த ஆண்டு கொல்கத்தா மருத்துவ கல்லூரியில் நடந்த பாலியல் வன்கொடுமை, கொலை சம்பவத்தை நினைவூட்டும் விதமாக, கொல்கத்தாவின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவி, அதே கல்லூரியின் முன்னாள் மாணவர் மற்றும் இரண்டு மூத்த மாணவர்களால் வளாகத்திலேயே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முக்கியக் குற்றவாளியான மனோஜித் மிஸ்ரா ஒரு முன்னாள் மாணவன் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் சத்ரா பரிஷத்தின் தெற்கு கொல்கத்தா மாவட்டத்தின் தற்போதைய அமைப்பு செயலாளர் ஆவார். க்ஷ்மற்ற இரண்டு குற்றவாளிகளுடன் அலிப்பூர் நீதிமன்றத்தில் இன்று மிஸ்ராஆஜர்படுத்தப்பட்டார். மற்ற இரண்டு குற்றவாளிகள், ஜெய் அஹமது மற்றும் பிரமித் முகர்ஜி என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் ஆவார்கள்.

பாதிக்கப்பட்ட பெண் கல்லூரி கூறியதாவது: யூனியன் அறையில் மிஸ்ரா என்னை பலவந்தப்படுத்தினான். நான் அழுது, என்னை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டேன். எனக்கு ஒரு காதலன் இருப்பதாகவும், என் காதலனை நான் நேசிப்பதாகவும் அவர்களிடம் சொன்னேன். ஆனால் அவன் கேட்கவில்லை,” என்று அப்பெண் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

மிஸ்ரா அப்பெண்ணின் காதலனை கொன்று விடுவேன் என்றும், அவரது பெற்றோர் மீது கிரிமினல் வழக்குகள் போலித்தனமாக பதிவு செய்யப்படும் என்றும் அச்சுறுத்தி, பின்னர் மாணவியை கல்லூரி வளாகத்திற்குள்ளேயே அடைத்து வைத்துள்ளான். மேலும் தான் ஒரு ஹாக்கி மட்டையால் தாக்கப்பட்டதாகவும், அதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இன்ஹேலர் கேட்டதாகவும் அப்பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இன்ஹேலரை பயன்படுத்திய பிறகு, அவர் தரை தளத்தில் உள்ள பாதுகாப்புக் காவலரின் அறைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு மாணவர் சங்க அலுவலகத்திற்கு அடுத்ததாக இருந்த அந்த அறையில் தாக்குதல் தொடர்ந்ததாக கூறப்படுகிறது.

“நான் அவன் காலில் விழுந்தேன், ஆனால் அவன் என்னை விடவில்லை. மிஸ்ரா என்னை பாலியல் வன்கொடுமை செய்தபோது, மற்ற இருவரும் அருகிலேயே நின்று பார்த்து கொண்டிருந்தனர். இரவு 10 மணி வரை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டேன்.

“மூன்று பேர் இந்த கொடூரம் நடந்தபோது மொபைல் மூலம் வீடியோ எடுத்ததாகவும், இந்த சம்பவம் குறித்து வெளியில் சொன்னால் அதை இணையத்தில் வெளியிடுவோம் என்றும் அச்சுறுத்தியதாகவும் அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட மூவரின் மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். “வீடியோ காட்சிகள் வேறு எண்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதா இல்லையா என்பதை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறோம்,” என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மனோஜித் மிஸ்ரா 2022ஆம் ஆண்டு தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றவர். கல்லூரியில் இருந்து வெளியே வந்த பின்னரும், வளாகத்தில் கணிசமான செல்வாக்கை அவர் நிலைநிறுத்தியிருந்ததாக கூறப்படுகிறது. பட்டப்படிப்புக்கு பிறகு, அவர் அலிப்பூர் காவல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்ற தொடங்கினார். மாணவராக இருந்த காலத்தில், மிஸ்ரா தனது ஆதிக்க போக்கிற்காகவும், பல தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவராகவும் அறியப்பட்டவர்.

மேலும், மிஸ்ரா, நாடாளுமன்ற உறுப்பினர் அபிஷேக் பானர்ஜி, மேற்குவங்க மாநில அமைச்சர் சந்திரமா பட்டாச்சார்யா மற்றும் கவுன்சிலர் கஜாரி பானர்ஜி உள்ளிட்ட மூத்த கட்சி தலைவர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் உள்ளதால் அரசியல் செல்வாக்கு உடையவர் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் மிச்ரா கல்லூரியில் படிக்கும்போதே திரிணாமுல் காங்கிரஸ் சத்ரா பரிஷத் பிரிவின் தலைவராக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் தானாகவே முன்வந்து விசாரித்ததுடன், கொல்கத்தா காவல்துறையிடம் மூன்று நாட்களுக்குள் விரிவான நடவடிக்கை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டது.

இந்த சம்பவத்திற்கு நெட்டிசன்கள் கொந்தளித்துள்ளனர். இவர்கள் எல்லாம் நாளை வழக்கறிஞர்களாகவோ, நீதிபதிகளாகவோ ஆனால் நாடு என்ன ஆகும் என்ற கேள்விகளும் பலரால் கேட்கப்படுகிறது.