என்னடா பொல்லாத வாழ்க்கை.. ஏர் இந்தியா விமானம் விபத்து.. 275 பேர் மரணம்.. பார்ட்டி வைத்து கொண்டாடிய ஊழியர்கள்.. மனசாட்சியே இல்லையா? அதிர்ச்சி வீடியோ..

x ஏர் இந்தியாவின் விமான நிலைய சேவை நிறுவனமான AISATS சமீபத்தில் ஒரு பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. குருகிராம் அலுவலகத்தில் ஊழியர்கள் கொண்டாடிய ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை…

party

x

ஏர் இந்தியாவின் விமான நிலைய சேவை நிறுவனமான AISATS சமீபத்தில் ஒரு பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. குருகிராம் அலுவலகத்தில் ஊழியர்கள் கொண்டாடிய ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. துரதிர்ஷ்டவசமாக, இந்த கொண்டாட்டம், ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளாகி, அதில் பயணித்த 241 பேர் உட்பட 275 உயிர்களை பலிகொண்ட சில நாட்களுக்கு பிறகு நிகழ்ந்துள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

வைரலான இந்த வீடியோ பலரையும் கொதிப்படைய செய்தது. அகமதாபாத் விமான விபத்தின் சோகமான சூழ்நிலையில் இத்தகைய கொண்டாட்டம் பொருத்தமற்றது என்று பலரும் கடுமையாக விமர்சித்தனர். இது நிறுவனத்தின் மனிதாபிமானமற்ற தன்மையையும், தொழில்முறை நெறிமுறைகள் மீதான அர்ப்பணிப்பையும் கேள்விக்குள்ளாக்கியது.

இந்தக் கண்டனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, AISATS நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மூத்த துணைத் தலைவர்கள் சம்பிரீத், பல்ஜிந்தர், பயிற்சிப் பிரிவுத் தலைவர் மற்றும் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி ஆபிரகாம் ஜக்காரியா உட்பட நான்கு உயர் அதிகாரிகள் பதவி விலக அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகம், இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களில் ஈடுபட கூடாது என மற்ற ஊழியர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இச்சம்பவம் தங்கள் நிறுவனத்தின் கொள்கைகளுக்கு எதிரானது என கூறி, AISATS தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளது.

AISATS செய்தித் தொடர்பாளர் ஒருவர், “AI 171 விமான விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நாங்கள் துணையாக நிற்கிறோம். சமீபத்திய வீடியோவில் வெளிப்பட்ட இந்த தவறான செயலுக்கு நாங்கள் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறோம். இதற்கு பொறுப்பானவர்கள் மீது உறுதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மனிதாபிமானம், தொழில்முறை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்தார்.

AISATS என்பது டாடா குழுமத்தின் கீழ் உள்ள ஏர் இந்தியா லிமிடெட் மற்றும் SATS லிமிடெட் ஆகியவற்றுக்கு இடையேயான 50-50 கூட்டு முயற்சியாகும். இந்த நிறுவனம் இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களில் தரை சேவைகளை வழங்குகிறது.

இந்த செயலுக்கு சமூக வலைத்தள பயனர்கள் கொதித்து எழுந்துள்ளனர். “அவர்கள் எப்படி இப்படி செய்ய முடியும்? முன்னரே திட்டமிட்டிருந்தாலும், விபத்துக்கு பிறகு தள்ளி வைத்திருக்கலாமே,” என்று ஒரு பயனர் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். மற்றொருவர், “மிகவும் பரிதாபகரமான, மனிதாபிமானமற்ற செயல்,” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.