இந்த ஆண்டு நாடாளுமன்றம்… அடுத்த ஆண்டு சட்டசபை… கமல் பக்கா பிளான் ரெடி!

கமல் இப்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். படத்தை வேகமாக முடித்து எப்படியாவது ஜூன் மாதத்தில் கொண்டு வர நினைத்தார்கள். அப்போது கேரளாவில் ஸ்டிரைக் என்று நியூஸ் வந்ததால் அதற்கு…

kamal speech

கமல் இப்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். படத்தை வேகமாக முடித்து எப்படியாவது ஜூன் மாதத்தில் கொண்டு வர நினைத்தார்கள். அப்போது கேரளாவில் ஸ்டிரைக் என்று நியூஸ் வந்ததால் அதற்கு முன்னதாகவே படத்தை வெளியிட நினைக்கிறார்கள். கமலுடன் சிம்பு இணையும் முதல் படம். படுமாஸாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி 7 ஆண்டுகள் நிறைவடைந்தது. இப்போது 8வது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறது. இதையொட்டி நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு கமல் வீறுகொண்டு பேசியுள்ளார். என்னன்னு பாருங்க.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆண்டுவிழாவில் கமல் பேசிய பேச்சு அனைவரையும் கவனிக்க வைத்தது. என்ன சொல்றாருன்னு பாருங்க. நான் தோல்வி அடைந்த அரசியல்வாதி என பலரும் விமர்சிக்கின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வரத் தவறியதைத்தான் என்னுடைய தோல்வியாக நான் பார்க்கிறேன். அப்படி வந்திருந்தால், நான் பேசும் பேச்சும், இருக்கும் இடமும் வேறாக இருந்திருக்கும் என்கிறார் கமல்.

மக்கள் நீதி மய்யத்தின் குரல் இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒலிக்கப் போகிறது. அடுத்த ஆண்டு சட்டமன்றத்தில் ஒலிக்கும் என்கிறார்.

கமலுக்கு திமுகவின் சார்பில் எம்பி சீட் கொடுக்கப்படுவதாக உள்ளது. இதனால் கமலே இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் குரல் ஒலிக்கும் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து தனது கட்சியை வலுப்படுத்தி அடுத்த ஆண்டு வரும் சட்டசபைத் தேர்தலில் ஜெயித்து எம்எல்ஏவாகி விடுவார். அதனால் அடுத்த ஆண்டு சட்டசபையிலும் என் குரல் ஒலிக்கும் என்று பூடகமாகத் தெரிவித்துள்ளார்.