தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் அஜித்குமார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் இன்று தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இவருக்கு கார் ரேசிங்கில் தான் அதிக ஆர்வம் இருந்திருக்கிறது. தனது 18 வது வயதில் கார் ரேசிங்கில் கலந்து கொண்டார் அஜித்குமார். அந்த நேரத்தில் மாடலிங்கும் செய்து வந்தார். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
1990களில் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான அஜித் குமார் காதல் மன்னன் வாலி போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்தார். 2000 காலகட்டத்திற்கு பிறகு பல கமர்சியல் வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக ஆனார் அஜித்குமார்.
இப்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறி பிப்ரவரி ஆறாம் தேதி ரிலீசானது. இந்த படம் தள்ளிப் போனதால் எல்லா திரைப்படங்களின் ரிலீஸும் குழப்பத்திற்கு உள்ளானது. அதே போல் இவர் நடித்த Good Bad Ugly திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீசாகும் என்று கூறப்பட்ட நிலையில் அது தள்ளி போகும் என்று பேசப்பட்டு வருகிறது. இன்னொரு விஷயம் இதில் என்னவென்றால் ஒவ்வொரு படத்தின் ரிலீசும் OTT தளங்கள் தான் முடிவு செய்கிறது.
இந்நிலையில் Good Bad Ugly திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதியை விட மே 1ஆம் தேதி அஜித்குமாரின் பிறந்த நாள் என்று வெளிவந்தால் ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டமாக இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் பேச்சு நிலவி வந்தது. அதேபோல் அஜித்குமாருக்கும் இந்த திரைப்படத்தை மே 1 ஆம் தேதி ரிலீஸ் செய்யலாம் என்று விருப்பம் இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். அதனால் இந்த திரைப்படம் மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆகலாம் என்று கூறப்பட்டு வருகிறது. என்ன நடக்கிறது அதிகாரப்பூர்வ தகவல் எப்படி வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.