மனைவி, குழந்தைகள் கண்முன் பத்திரிகையாளரை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் ராணுவம்.. அதிர்ச்சி சம்பவம்..!

  பாகிஸ்தான் ராணுவ படைகளால் பலுசிஸ்தான் பத்திரிகையாளர் அப்துல் லத்தீப் என்பவர் இன்று அதிகாலை அவரது வீட்டிலேயே சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். மஷ்கே நகரிலுள்ள அவரது இல்லத்தில், மனைவி மற்றும் குழந்தைகள் முன்னிலையில் அவரை…

journalist

 

பாகிஸ்தான் ராணுவ படைகளால் பலுசிஸ்தான் பத்திரிகையாளர் அப்துல் லத்தீப் என்பவர் இன்று அதிகாலை அவரது வீட்டிலேயே சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். மஷ்கே நகரிலுள்ள அவரது இல்லத்தில், மனைவி மற்றும் குழந்தைகள் முன்னிலையில் அவரை கொடூரமாக படுகொலை செய்துள்ளதாக உள்ளூர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அப்துல் லத்தீப் பலுசிஸ்தான் மக்களின் துன்பங்கள், எதிர்ப்புகள், மற்றும் தைரியங்களை பத்திரிகைகள் மூலம் வெளிக்கொணர்ந்து, பாகிஸ்தானின் அடக்குமுறைக்கு எதிரான குரல் கொடுத்து கொண்டிருந்தார். பாகிஸ்தான் ராணுவமும் அதன் ஆதரவு கொண்ட தீவிரவாதிகளும் பலுசிஸ்தான் மக்கள் மீது நிகழ்த்தும் மனித உரிமை மீறல்களை அவர் உலகிற்கு கொண்டு வந்தார்.

Baloch Yakjehti Committee இந்த படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. “மே 24, 2025, அதிகாலை 3:00 மணியளவில், அப்துல் லத்தீப் அவருடைய மஷ்கே, அவாரன் மாவட்ட இல்லத்தில் பாகிஸ்தான் அரச ஆதரவுள்ள படையினரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது மனைவி, குழந்தைகள் முன்னிலையில் அவரை சுட்டு கொன்றனர்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்துல் லத்தீப் ஒரு பத்திரிகையாளர் மட்டும் அல்ல, அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட பலுசிஸ்தான் மக்களுக்காக பேசும் குரலாகவும், அவர்களது துயரங்கள், எதிர்ப்புகள், மற்றும் தைரியங்களை பதிவு செய்தவராகவும் இருந்தார். “உண்மையை பேசுவது குண்டுகளால் தண்டிக்கப்படும் இந்த நிலத்தில், அவரது பத்திரிகை செயல் ஒரு குற்றமாகவே கருதப்பட்டது” எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அப்துல் லத்தீப்பின் கொலை தனிப்பட்ட ஒரு சம்பவமல்ல; இது பாகிஸ்தானின் தொடர்ந்து நடைமுறையில் உள்ள கொலை செய் என்ற கொள்கையின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது. இது பலுசிஸ்தான் இனத்தை அழிக்கவும், எதிர்ப்பை ஒழிக்கவும் அமைகிறது.

சில மாதங்களுக்கு முன்னர், அப்துல் லத்தீப்பின் மகன் சயிப் உட்பட ஏழு குடும்ப உறுப்பினர்கள் பாகிஸ்தானிய பாதுகாப்புப் படைகளால் கடத்தப்பட்டு, பின்னர் கொல்லப்பட்டனர். இது முழு குடும்பங்களை இலக்காக கொண்ட அழிப்பு முயற்சி என்பது வெளிப்படையாக உள்ளது.

அப்துல் லத்தீப்பின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஐக்கிய நாடுகள், உலக ஊடகங்கள் மற்றும் பத்திரிகை சுதந்திர அமைப்புகளை, இந்த மனிதநேய குற்றங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்