சிங்காரம் நீ மறுபடி எங்கள தொட்டிருக்க கூடாது … அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்.. 3ஆம் உலகப்போர் ஆரம்பமா?

  ஈரானில் உள்ள மூன்று முக்கிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கப் படைகள் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தித் திரும்பியதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இது உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த…

iran vs usa

 

ஈரானில் உள்ள மூன்று முக்கிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கப் படைகள் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தித் திரும்பியதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இது உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே நீடித்துவரும் மோதலில், இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இந்த பதட்டமான சூழலில், ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் , மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. டிரம்ப் தனது சமூக வலைத்தளப் பதிவில், “எங்கள் தாக்குதல் வெற்றிகரமாக முடிந்துவிட்டது; அனைத்து விமானங்களும் ஈரான் வான்வெளியை விட்டு பாதுகாப்பாக அமெரிக்காவிற்கு திரும்பிவிட்டன. அமெரிக்காவின் சிறந்த போர் வீரர்களுக்கு வாழ்த்துக்கள் என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, “அமெரிக்கர்கள் முன்பை விட பெரிய சேதங்களையும், அடியையும் எதிர்பார்க்க வேண்டும்” என்று கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தங்கள் இறையாண்மைக்கு எதிரான போர் செயல் என ஈரான் கருதுகிறது.

காமேனியின் பிரதிநிதியான ஹொசைன் ஷாரியத்மதாரி, “இப்போது தாமதமின்றி செயல்பட வேண்டியது எங்கள் முறை,” என்று கூறி, பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை மீது ஏவுகணை தாக்குதல் நடத்தவும், முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை மேற்கத்திய நாடுகளின் கப்பல்களுக்கு மூடவும் முன்மொழிந்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், டொனால்ட் டிரம்ப், ஈரானின் எந்த பதிலடி நடவடிக்கையும் “பெரும் சக்தியுடன்” எதிர்கொள்ளப்படும் என்று கடுமையாக எச்சரித்துள்ளார். இரு நாடுகளும் மேலும் மோதலின் விளிம்பில் இருப்பதாகவே இப்போதைய சூழல் காட்டுகிறது.

இந்த உச்சகட்ட பதட்டங்களுக்கு மத்தியிலும், ஈரானிய அரசு ஊடகங்கள் தங்கள் மக்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளன. அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலுக்கு பிறகு பொதுமக்களுக்கு “ஆபத்து இல்லை” என்றும், நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும், ஈரான் மீதான அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் உலக நாடுகள் இடையே மூன்றாவது உலகப் போர் குறித்த பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.