நடிகை சமந்தா ஒரு அறிவில்லாதவர்.. தவறான பொருளை விளம்பரம் செய்வதாக மருத்துவர் விமர்சனம்,.!

  நடிகை சமந்தா அறிவியல் அறிவு இல்லாதவர் என மருத்துவர் ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை சமந்தா தனது சமூக ஊடகங்களில் The Liver Doc என்றழைக்கப்படும் மருத்துவ பொருளை…

samantha

 

நடிகை சமந்தா அறிவியல் அறிவு இல்லாதவர் என மருத்துவர் ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை சமந்தா தனது சமூக ஊடகங்களில் The Liver Doc என்றழைக்கப்படும் மருத்துவ பொருளை விளம்பரம் செய்ததற்கு மருத்துவர் சிரியாக் அபி பிலிப்ஸ் என்பவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சமந்தா விளம்பரம் செய்யும்   NMN (நைகோடினமைடு மோனோநியூகிளியோடைடு) என்பது ஒரு மோசமான மருத்துவ பொருள் என்று அவர் கூறியுள்ளார்.

நடிகை சமந்தா பிராண்ட் குறித்து கூறியபோது, “NAD+ அளவு வயதினால் குறைகிறது; இதனால்  எடை குறைவு,  சோர்வு  கவனக் குறைவு ஏற்படுகிறது. எனவே NMN இந்த பிரச்சனைகளை சரி செய்ய உதவலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால் The Liver Doc இன்ஸ்டா பக்கத்தில் மருத்துவர் பிலிப்ஸ், ‘சமந்தா அறிவியல் பற்றிய அறிவில்லாதவர். சினிமா பிரபலங்கள், எந்த ஒரு செயல்பாடும் இல்லாத பொருட்களை விற்று கோடிக்கணக்கான ரசிகர்களை ஏமாற்றுகிறார்கள் என்று கூறுகிறார்:

உண்மையில் வயதான காலத்தில் சத்துள்ள உணவு, உடற்பயிற்சி, தூக்கம், மதுபானம் மற்றும் புகையிலை தவிர்த்தல், தடுப்பூசி போடுதல்  இவை போன்ற சாதாரணமாக விஷயங்கள் தான்  பயனளிக்கக்கூடியவை. இன்னும் 2ம் கட்ட சோதனையையே கடக்க முடியாத மருத்துவ பொருட்களை மக்களிடம் திணிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

நாகரீகமாக, நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி ஏமாற்றும் snake oil salesmen  மற்றும் saleswomen பல வடிவங்களில் வந்திருப்பார்கள். அறிவுடன் இருக்கவும். அறிவியல் மற்றும் ஆதாரத்தோடு முன்னேறுங்கள். உண்மையான மருத்துவர்களை அணுகவும்’ என்று தெரிவித்தார்.

மேலும் இதில் உள்ள இன்னொரு விஷயம் என்னவெனில் நடிகை சமந்தா விளம்பரம் செய்யும் பிராண்ட்  நிறுவனத்திற்கு அவர் தான் இணை இயக்குனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமந்தா தற்போது வரை The Liver Doc இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட விமர்சனங்களுக்கு பதிலளிக்கவில்லை.  கடந்த ஆண்டு, சமந்தா ஹைட்ரஜன் பெராக்சைடு நெபுலைசேஷனை பரிந்துரை செய்தபோது இதே  மருத்துவர் அவரை கடுமையாக விமர்சனம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.