ரூ.72,999 விற்பனையான சாம்சங் மாடல் ஸ்மார்ட்போனின் விலை ரூ.64,999 தான்.. ஆச்சரிய தகவல்..!

Published:

கடந்த ஆண்டு 72,999 என்ற விலைக்கு விற்பனையான சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் தற்போது சலுகை விலையில் ரூ.64,999 என்ற விலைக்கு விற்பனை ஆகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் கடந்த ஆண்டு Samsung Galaxy S22 ஸ்மார்ட்போன் ரூ. 72,999. என அறிமுகமானது. 4nm ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 1 SoC பிராஸசஸ் மற்றும் 25W வயர்டு, 15W வயர்லெஸ் சார்ஜிங் அம்சங்களோடு 3,700mAh பேட்டரியைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ.64,999 என்ற விலையில் கிடைக்கிறது.

Samsung Galaxy S22 ஸ்மார்ட்போன் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் மாடல் சுமார் ரூ.8,000 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் இந்த அரிய வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Samsung Galaxy S22 ஸ்மார்ட்போன் 6.1-இன்ச் முழு-HD+ டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே, மற்றும் 120Hz அம்சங்களோடு Gorilla Glass Victus+ பாதுகாப்புடன் உள்ளது. இரட்டை நானோ சிம், ஆண்ட்ராய்டு 12ஓஎஸ் மற்றும் One UI 4.1 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸில் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது.

மேலும் டிரிபிள் ரியர் கேமராவில் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார், அல்ட்ரா-வைட் ஷூட்டருடன் கூடிய 12 மெகாபிக்சல் சென்சார் மற்றும் டெலிஃபோட்டோ லென்ஸுடன் கூடிய 10 மெகாபிக்சல் சென்சார் ஆகியவை அடங்கும். 10 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் உள்ளது.

Samsung Galaxy S22 ஸ்மார்ட்போன் 25W வயர்டு, 15W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 3,700mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. 5G, 4G LTE, Wi-Fi 6, புளூடூத் v5.2, GPS/ A-GPS மற்றும் USB Type-C இணைப்பு போன்ற வசதிகளையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டெண்ட், பிங்கர் சென்சார் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் எடை 168 கிராம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...