இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்… எங்கே போகிறது கலாச்சாரம்? அநியாயம் பண்றீங்கடா..!

இன்ஸ்டாகிராமில் வெளியான தாய்-மகன் நடனமாடும் வீடியோ ஒன்று கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ள நிலையில், இந்த வீடியோவுக்கு ஏராளமான எதிர்மறை கருத்துகள் குவிந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்-மகன் உறவு…

mother son

இன்ஸ்டாகிராமில் வெளியான தாய்-மகன் நடனமாடும் வீடியோ ஒன்று கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ள நிலையில், இந்த வீடியோவுக்கு ஏராளமான எதிர்மறை கருத்துகள் குவிந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாய்-மகன் உறவு என்பது எப்போதுமே புனிதமாகவும், இரு தரப்புக்கும் இடையே கண்ணியமாகவும் இருக்கும் என்பதும், முழுக்க முழுக்க பாசத்தின் அடிப்படையில் இருக்கும் என்பதும்தான் இன்றைய கலாச்சாரத்தின் அடிப்படையாக உள்ளது.

‘ஜியா பிரவுனி’ என்ற இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் சமீபத்தில் வெளியிட்ட ஒரு வீடியோவில், அவர் தனது டீன் ஏஜ் மகனுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார். வெறும் டி-சர்ட் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்துள்ள அந்தப் பெண், தனது குறும்புத்தனமான அசைவுகளில் நடனமாடுகிறார். அவருக்கு இணையாக அவரது டீன் ஏஜ் பையனும் நடனமாடுகின்றனர். இருவருக்கும் இடையிலான இடைவெளி காணப்பட்டாலும், வீடியோவின் நடன அமைப்பு, அங்க அசைவுகள் மற்றும் படமாக்கப்பட்ட விதம் ஆகியவை அருவருப்பாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த வீடியோவுக்கு “அம்மா மகன் பைவ்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், பலரும் இது குறித்து எதிர்மறையான கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்றுள்ள இந்த வீடியோவுக்கு, கிட்டத்தட்ட 2,000 கருத்துகள் பதிவாகியுள்ளன என்பதும், அவை அனைத்துமே கிட்டத்தட்ட கோபத்தையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தும் கருத்துகளாகவே உள்ளன.

“குழந்தைக்கு என்ன மாதிரியான பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன?”, “இத்தகைய காட்சிகள் தாய்மை உணர்வையே குறைக்கின்றன”, “மகனின் முன்னிலையில் இது போன்ற ஆடை அணிந்ததன் நோக்கம் என்ன?” என்பது போன்ற கருத்துகள் பதிவாகி வருகின்றன. சமூக வலைத்தளங்களில் லைக்ஸ் பெறுவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? தாய்-மகன் உறவில் உள்ள கண்ணியத்தை காப்பாற்றும் வகையில் நடந்துகொள்ள வேண்டாமா? என்பது போன்ற கருத்துகளும் பதிவாகி வருகின்றன.

சிலர் இதை விளையாட்டாக எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியிருந்தாலும், பெரும்பாலான கருத்துகள் எதிர்மறையாகவே பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. “இது அம்மா மகன் ஆடுகிற டான்ஸா? நமது கலாச்சாரம் எங்கே போகிறது? ரொம்ப அநியாயம் பண்றீங்கடா!” என்ற கருத்துகள் இன்னும் தொடர்ந்து பதிவாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://www.instagram.com/reel/DK6UGnNqjfA/?utm_source=ig_web_copy_link