கர்ப்பத்தில் நானே கரைந்திருப்பேனே.. சோனம் கர்ப்பமாக இருக்கிறாரா? மருத்துவ பரிசோதனை சொல்வது என்ன?

  இந்தூர் தம்பதிகள் ஹனிமூன் சென்ற விவகாரத்தில் கணவன் உயிர் இழந்ததாகவும், அவரை மனைவியே கூலி ஆட்களை வைத்து கொலை செய்ததாகவும் கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

sonam

 

இந்தூர் தம்பதிகள் ஹனிமூன் சென்ற விவகாரத்தில் கணவன் உயிர் இழந்ததாகவும், அவரை மனைவியே கூலி ஆட்களை வைத்து கொலை செய்ததாகவும் கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தூரை சேர்ந்த ராஜா மற்றும் சோனம் தம்பதிகள் ஹனிமூனுக்காக மேகாலயா சென்றபோது, திடீரென காணாமல் போனதாக சொல்லப்பட்டது. அதன் பிறகு தேடுதல் வேட்டையில், ராஜாவின் உடல் மட்டும் கண்டெடுக்கப்பட்ட நிலையில், சோனம் தான் அவரை ஆளை வைத்து கொலை செய்ததாக கூறப்பட்டது.

இதனை அடுத்து, உத்திரப்பிரதேசத்தில் சோனம் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைதுக்கு பிறகு அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது தான், அவர் கர்ப்பமாக இருப்பது குறித்த தெளிவில்லாத கருத்துகள் வெளிவந்து கொண்டிருக்கின்றதாக தெரிகிறது.

இது குறித்து மருத்துவர்கள் கூறிய போது, அடிப்படை பரிசோதனைகளில் கர்ப்பம் தெளிவாக தெரியவில்லை. தொடக்க கால கர்ப்பமாக இருந்தால், கர்ப்பத்தை உறுதி செய்ய ஸ்கேன் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சோனம் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டால், இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் சோனம் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டால் அந்த குழந்தை மீது சில சர்ச்சைக்குரிய விவாதங்கள் எழும் என்றும், இது தெரிந்திருந்தால் அந்த குழந்தை கர்ப்பத்திலேயே கரைந்துவிடும் என்று நெட்டிசன்கள் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.

மேகாலயா போலீசார் சோனத்தை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் என்றும், குற்றம் நடந்த இடத்தில் சோனத்தை அழைத்துச் சென்று சில விசாரணைகள் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சோனம் மற்றும் அவருடைய மூன்று நண்பர்கள் ஆகாஷ் ராஜூத், விஷால் சிங் சவுகான் மற்றும் ராஜசிங் ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் ராஜசிங் சோனத்துடன் மிகவும் நெருக்கமானவர் என்று தெரிகிறது.

அதுமட்டுமின்றி, அவர் ராஜாவின் இறுதி நிகழ்வுகளில் பங்கேற்றதாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தனது மகள் சோனம் ஒரு அப்பாவி என்றும், மேகாலயா போலீசார் வேண்டுமென்றே தன் மகள் மீது கொலை குற்றம் சாட்டியிருப்பதாகவும், இதனை நான் சட்டபூர்வமாக எதிர்கொள்ளப் போகிறேன் என்றும் சோனத்தின் தந்தை தேவி சிங் தெரிவித்துள்ளார்.